பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

இப்பதிகத்தில் இறைவன் அகரமுதலான எழுத்துக் களாக உள்ளான் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இது 'அகரமுதல எழுத்தெல்லாம்” என்னும் குறட் கருத்துக் கேற்பப் பாடப்பட்டதாகும்.

திருவாப்பனூர் வைகைக் கரையில் உள்ளது என்பதை ஈற்றுப்பாடல் தெற்றத் தெளிய 'அந்தண் புனல் வைகை அணி ஆப்பனூர்” என்று கூறி அறிவிக்கின்றது. திருவாப் பனூர் அழகிய தலமாதலின் "அணி ஆப்பனூர்' என்று சிறப்பிக்கப்பட்டது. இப்பதிகத்தைப் பாடுபவர், தடுமாறும் iசிலையைப் போக்கிக் கொள்வர் என்பதும் கூறப்பட் டுள்ளது.

3. திருப்பரங்குன்றம்

இது பண்டைய காட்டுப் பாடல்பெற்ற தலங்களுள் மூன்ருவது. முருகன் இறைவனே வழிபட்ட தலம். இத்தலம் முருகப் பெருமானுக்குரிய ஆறுபடை வீடுகளுள் ஒன்ருக வும் விளங்கும் பெரும்ை வாய்ந்தது. இதனை நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப்படை மூலம் அறியலாம். இத்தலத்திற்குத் திருஞானசம்பந்தரும், சுந்தரரும் பாடிய பதிகங்கள் இரண்டு உண்டு. முருகப் பெருமான் தெய்வயானையை மணந்த இடம் இதுவே. அதுபோது இறைவரும் இறைவி யாரும் அவர்க்குக் காட்சிதந்த தலம். சுந்தரர் தம் காலத் தில் இருந்த மூவேந்தர்களாகிய சேரசோழ பாண்டிய மன்னர்களுடன் சென்று தரிசித்துத் தொண்டு செய்த rேத்திரம். இதனை 'முடியாமல் உலகாண்ட மூவேந்தர் முன்னே மொழிந்த ஆம் ஓர் நான்கும் ஓர் ஒன்றும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இத்தலம் மலேயில் குடையப்பட்டிருக்கிறது. இத் தலத்தின் மலேக் குகையில் தான் நக்கீரர் பூதத்தால் அடைக் கப்பட்டனர் என்றும். அதுபோது திருமுருகாற்றுப் படை