பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

இறைவன் படம்பக்க நாதர் என்ற திருப்பெயரையும் தாங்கியுள்ளார்.

இப்பதிகத்தால் சுந்தரர் ஏதோ உடல் நோயால் சிறிது துன்புற்றிருந்ததாகவும், அது தீரும் பொருட்டு இறைவரை வேண்டி வந்ததாகவும் தமக்குச் சோறும் கூறையும் தேவை யாக இருந்தன என்பதும் போன்ற குறிப்புக்கள் காணக் கிடக்கின்றன. அருளே திருமேனியாக உடைய உமை யம்மையை உடன் வைத்திருந்தும் உதவி புரித்திலீரே என்று இடித்து உரைப்பார் போல, "அதுவே அன்றியும் வேப்புரையும் தோளான் உமை கங்கை ஓர் பங்கு உடையீர் உடுகூறையும் சோறும் தந்து ஆளகில்லீர் (ஆல்ை) ஆள் ஆளியவே கற்றீர்” என்று அடிகளில் சுட்டிக்காட்டி இறைவருடன் சுந்தார் ஏச்சு மொழி இசைக்கின்ற அழகையும் இப்பதிகத்தில் கன்கு காணலாம்.

இப்பதிகத்தைப் பன்முறை படிக்கப் படிக்கத்தான் இதனை அடங்கிய இலக்கியச் சுவையும் இன்பச் சுவையும் இனிதின் நுகர ஏதுவாகும். 'பெரியாரோடு நட்பு இனிது” என்னும் தொடர் என்றும் நம் மனத்தில் இருத்தற்குரிய தாகும். பெரியாரைத் துணைக்கோடல், என்றும் திருக் குறட்பாக்கள் பத்தின் பொருளும் இதில் அடங்கி இருக்கிறது.

4. திருவேடகம்

பாண்டிய நாட்டுத் தலங்களில் இது கான்காவது. திருஞானசம்பந்தர் சமணர்களோடு செய்த வாதங்களில் புனல்வாதமும் ஒன்று. இந்த வாதத்தின்போது, சம்பந்தர் 'வாழ்க அந்தணர்” என்னும் பதிகம் பாடி அதனை ஏட்டில் எழுதி வைகையில் இட்டனர். இவ்வாறே சமணர்கள் தம் சமயப் பெருமையினே எழுதி வைகையில் இட்டனர். சமணர் இட்ட ஏடு ஆற்றுநீர் செல்லும் வழியே சென்று இருக்கும்