பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பாண்டி நாட்டுக் கோவில்கள்


தமிழ் நாடு பலவகைகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. அப்படிப் பகுக்கப்பட்ட வகைகளுள் பாண்டிய நாடு என்பதும் ஒன்று. இப்பாண்டிய நாட்டில் இறைவன் உறை விடங்களாக உள்ள கோவில்கள் பலவாக இருந்தாலும், அவற்றுள் கால்வர்களால் பாடப்பட்ட பெருமை சான்ற தலங்கள் பதினைகாகும். அவையே மதுரை (இது திருவாலவாய் என்றும் கூறப்படும்.) திருவாப்பனூர், திருப்பரங்குன்றம், திருவேடகம், திருக்கொடுங்குன்றம், திருப்புத்தூர், திருப்புனவாயில், திருவிராமேச்சுரம், திருவாடானை, திருக்கானப் பேர், (இதனைக் காளையார் கோவில் என்பர்) திருப்பூவனம், திருச்சுழியல், திருக்குற்ருலம், திருநெல்வேலி என்பன.


மதுரை (திருவாலவாய்) குலசேகரபாண்டியன் இதனைத் திருநகரமாகக் கண்டனன். அதன் பின் சிவபெருமான் தன் சடையில் உள்ள பிறையிலிருந்து சிறிது மதுவை (தேனை) தெளித்தார். அதனுள் இது மதுரை என்ற பெயரைப்பெற்றது. வருணன் ஒரு முறை மதுரையை அழிக்க எண்ணம் கொண்டான். அதற்காக ஏழுமேகங்களையும் அனுப்பி அடா மழை பெய்யக் கட்டளை இட்டான். அது போது சோமசுந்தரப்பெருமான் மதுரையின் நான்கு எல்லைகளுக்கும் நான்கு மேகங்களை ஏவ, அவை கூடமாகக்கவிந்து மதுரை அழியாதபடி காப்பாற்றின. அதனுள் நான்மாடக் கூடல் என்ற பெயரைப் பெற்றது. மதுரையின் எல்லை எது வரையுள்ளது என்பதைப் பாண்டியன் அறிய சிவபெருமான் தம் உடம்பில் உள்ள பாம்பின் மூலம் செய்ததால்,