பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

2. பொய்கையின் பொழிலுறு புதுமலர்த் தென்றலார்

வைகையின் வட்கரை மருவிய ஏடகத் தையனை அடிபணிந்து அரற்றுமின் அடர்தரும் வெய்யவன் பிணிகெட் வீடெளி தாகுமே. (அ. சொ.) பொழில் - சோலை, உறு - பொருந்திய மருவிய-பொருந்திய அரற்றுமின்-அன்பினல் கதறுங்கள், அடர்தரும்-நெருங்கும், வெய்ய-மிகக்கொடிய, வன்பிணிவன்மைமிக்க நோய், வீடு - மோட்சம், எளிது - அடைதல்

&FGULILD.

இப்பதிகம் மக்களுக்கு நல்ல உபதேசம் செய்யும் முறையில் அமைந்த குறிப்புக்களைக் கொண்டுள்ளது. உலக மக்களே நோக்கி, "மக்களே, அன்பினல் கதறுங்கள். அப்படிக் கதறில்ை இடிபடும் வினைகள் போவதோடு, என் றுமே இல்லாமல் போகும். கொடியதும், நம்மை வந்து அணுகுவதும், வன்மை மிக்கதும் ஆன நோய் கெட்டு மோட்சமும் எளிதாக வந்து கூடும் என்றும், கண்டு கை தொழுதால் கவலே கோய் நீங்கும் என்றும் ஏடகம் சேர் வதே நமக்குப் பெருஞ் செல்வம்' என்றும் இப்பதிகத்தில் குறிப்பிடப்பட்டதைக் காண்க.

"அரற்றுமின் அன்பில்ை, இடிபடும் வினைகள் போய் இல்லையாகுமே” “கண்டு கை தொழுதலும் கவலை நோய் கழலுமே" "சீலமார் ஏடகம் சேர்தலாம் செல்வமே” "வெய்யவன் பிணி கெட வீடு எளிதாகுமே" என்ற அருங் தொடர்கள் நம் கினேவில் இருத்தற்குரியன.

திருவேடகம் இன்னிசைப் பாடல் நிறைந்த தலம். மறை யவர் வழிபடும் தலம். இங்குள்ள மாளிகைகள் உயர மானவை. கொடிகள் கட்டப்பட்டு இவற்றின் உச்சி உயர்க் திருந்தமையால் சந்திரனும் வந்து தங்கும் அளவுக்கு இருக் தன. இத்தலத்தில் குருக்கத்தி, சந்தனமரம், சண்பகம் முதலான மரங்கள், மிகுதியாக உண்டு. ஒழுக்கம்