பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 I

நிறைந்தவர் வாழும் தலமாகும். பொய்கைகளும் சோலை களும் கிறைந்த புதுமலர்களைப் பெற்றுத் தென்றல் காற்று உலவப்பெற்று வைகையாற்றங் கரையின் வடக்கில் அமைந்த பதியாகும். வைகையாறு பொன், மணி, சந்தனம், அகில், யானைத் தந்தம் முதலான பொருள்களே அடித்துக் கொண்டு கரையை மோதும் அலைகளையுடையது என்பன போன்ற குறிப்புக்கள் இப்பதிகத்தால் புலனுகின்றன.

சமணர்கள் கையில் கமண்டலம் உடையவர்கள், தம் வயிற்றை வளர்ப்பதில் பெருநோக்கம் உடையவர். பணி யாதவர் என்றும், பெளத்தர்கள் குணமில்லாதவர்கள் என் றும் இப்பதிகத்தால் அறிகிருேம்.

இப்பதிகத்தில் உள்ள பாடல்கள் பத்தையும் பாட வல்லவர்களுக்குப் பாவம் இல்லை. இப்பதிகம் திருஞான சம்பந்தரது வாழ்க்கை வரலாற்று உண்மைக்கு அகச்சா ன்ருய் கின்று துணைபுரியும் பதிகமாகும்.

திருஞானசம்பந்தர் புனல்வாதம் செய்தபோது. எடு சென்று தங்கிய குறிப்பினே "ஏடு சென்றணே தரும் எடகம்” என்று இப்பதிகத் திருக்கடைக் காப்புக் குறிப் பிடுகின்றதன்ருே?

ஒன்பதாவது பாடலில் "பண்டியைப் பெருக்கிடும் பளகர்கள்” என்று கூறியதைப் படிக்க நமக்கு நகைச்சுவை தோன்றுகிறது. பண்டி-வயிறு, பளகர்-மூடர்.

5. திருக்கொடுங்குன்றம் இத்தலம் சிவபெருமானுக்குரிய தல மாதலோடு முருகப்பெருமானுக்கும் உரிய தலமுமாகும். இது பிரான் மலே என்றும் பிரான்மலைச் சீமை என்றும் கூறப்படும். இத்தலம் மலேயடிவாரத்தில் உள்ளது.