பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55

இத்தலத்தில் அம்மையப்பரை வழிபடுவதோடு, இரு விருவர்க்கும் இடையில் உள்ள பைரவர் சங்கிதியையும் கண்டு தரிசிக்கலாம். இவ்வைரவர் இங்கு சிறப்பு மிகுதியும் பெற்றவர். ஆனந்தக் கூத்தப்பெருமான், சிவகாமி அம்மை யார் திருவுருவங்கள் கற்சிலையால் ஆனவை. பார்க்கப் பார்க்கப் பரவசம் ஊட்டுபவை. இங்கு விஷ்ணுவுக்கும் தனிக்கோயில் உண்டு.

இத்தலத்து இறைவரை உமாதேவியாரும், இலக்கு மியும் பூசித்துப் பேறுபெற்றனர். இறைவர் புத்துார் ஈசர் பூந்தளிகாதர், இறைவியார் சிவகாமி அம்மையார்; தீர்த்தம் பூநீதளித் தீர்த்தம், சிவகெங்கை, கருடதீர்த்தம்; தல விருட்சம் கொன்றை.

இத்தலத்தைத் திருஞானசம்பந்தரும் அப்பரும் பாடி யுள்ளனர். இத்தலம் இராமநாதபுரம் சிவகங்கையிலிருந்து, 32 கல் தொலைவில் உள்ளது.

முதல் திருமுறை பதிகம் 26 பண் தக்கராகம் 1. வெங்கள் விம்மு வெறியார் பொழில்சேலை

திங்க ளோடு திளைக்கும் திருப்புத்தூர்க் கங்கை தங்கும் முடியார் அவர்போலும் எங்கள் உச்சி உறையும் இறையாரே (அ. சொ.) வெங்கள்-விரும்பத்தக்கதேன், விம்முநிறையும், வெறி-வாசனை, ஆர்-பொருந்திய, பொழில்-சோலை திங்கள்-சந்திரன், திளேக்கும்-விளங்கும், உறையும்-வாழும். 2. மருவி எங்கும் வளரும் மட்மஞ்ஞை

தெருவு தோறும் திளைக்கும் திருப்புத்தூர்ப் பெருகி வாழும் பெருமான் அவன் போலும் பிரமன் மாலும் அறியாப் பெரியோனே

(அ. சொ) மருவி கலந்து, மடமஞ்ஞை-இளைய மயில்கள்.