பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

3. நல்ல கேள்வி ஞான சம்பந்தன்

செல்வர் சேடர் உறையும் திருப்புத்துணர்ச் சொல்லல் பாடல் வல்லார் தமக்கென்றும் அல்லல் தீரும் அவலம் அட்ையாவே (அ. சொ.) சேடர்-பெருமையுடைய பெருமானர்.

உறையும்-வாழும், அல்லல்-துன்பம், அவலம்-வறுமை.

திருப்பத்துாரும் சோலைகளையுடையது. அச்சோலைகள் தேனும், மணமும் நிறைந்தவை. அச்சோலை சந்திரன் திளைக்கும் தன்மையது. இங்கு வண்டுகள் கிறைந்து ஒலித்துக் கொண்டும் பாடிக்கொண்டும் இருக்கும். இவ் வண்டுகள் மலர்ந்த மலர்களில் உள்ள தேனைப் பருகித் திளைத்துக்கொண்டிருக்கும்.

இத்திருப்பத்துார்ப்பதி பு க ழு ைட யது. அழகும் உடையது. திசைகள் எங்கும் விளங்கும் சோலைகளையும் உடையது. இங்கு நீர்வளம் மிகுதி. இங்குள்ள தெளிந்த நீரில் வெண்ணிற மலர்கள், மணமுடைய மலர்கள் நிறைந்து இருக்கும். கெய்தல், ஆம்பல், கழுநீர் முதலான மலர்கள் மலர்ந்து காணப்படும். நிலவளத்திற்கும் குறைவில்லை. "செய்கள் மல்கு திருப்பத்தார்' என்றே சிறப்பிக்கப்பட்ட பெருமை கிறைந்தது. இத்தலத்தின் சோலேமீது படரும் மேகங்கள் அச்சோலை மலர்களின் மணம் படிந்து மண முடையனவாகத் திகழ்ந்து கொண்டிருக்கும். இளைய மயில்கள் தெருவுதோறும் திரிந்து கொண்டிருக்கும் என்பன இத்தேவாரப் பதிகத்தால் திருப்புத்துாரைப் பற்றி நாம் அறிந்துகொள்வன.

"எங்கள் உச்சி உறையும் இறையார்," "பிரமன்மாலும் அறியாப் பெரியோன்”, “அல்லல் தீரும் அவலம் அடையா' என்பன இப்பதிகத்தில் காணப்படும் அரும்பொருள் தொடர்கள்.