பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5?

இத்தலத்துக் கோயில் நாளும் நாளும் சிறப்புறும் கோயில் ஆதலின், இதனை "ஓங்கு கோயில்' என்றனர். இங்குள்ள இறைவர் செல்வரும் சேடரும் ஆவர். இத்தலத் துப் பதிகத்தைப் பாடவல்லவர் அல்லலும், வறுமையும் நீங்கப் பெறுவர் என்பது நல்ல கேள்வி ஞானமுடைய ஞானசம்பக்தர் துணிபாகும்.

ஆரும் திருமுறை பதிகம் 76

திருத்தாண்டகம்

1. புரிந்தமரர் தொழுதேத்தும் புகழ்தக் கோன்காண்

போர்விடையின் பாகன்காண் புவனம் ஏழும்

விரிந்துபல உயிராகி விளங்கி னுன்காண்

விரைக்கொன்றைக் கண்ணியன்காண் வேதம் நான்கும்

தெரிந்துமுதல் படைத்தோனைச் சிரம்கொண் டோன்காண் தீர்த்தன்காண் திருமால்ஒர் பங்கத் தான்காண்

திருந்துவயல் புடைதழுவும் திருப்புத் தூரில்

திருத்தளியான் காண் அவன்என் சிந்தை யானே

(அ.சொ.) புரிந்து-விரும்பி, அமரர்-தேவர், எத்தும்போற்றும், விடை இடபம், புவனம்-உலகம், புவனம் ஏழ்பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், சனலோகம், தபோ லோகம், மகரலோகம், சத்தியலோகம் என்பன. விரைவாசனை, கண்ணியன்-மாலையுடையவன், படைத்தோன்பிரமன், தீர்த்தன்-மகாபரிசுத்தன், புடை-பக்கம், திருத் தளி-திருப்புத்துார்த் திருக்கோயில் திருப்பெயர்.

2. மின்காட்டும் கொடிமருங்குல் உமையாட் கென்றும்

விருப்பவன்காண் பொருப்புவலிச் சிலக்கை யான்காண் நன்பாட்டுப் புலவனுய்ச் சங்கம் ஏறி

நற்கனகக் கிழிதருமிக் கருளி ணுன்காண்