பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59

இத்திருப்பதிகத்தில் திருமறைக்காடு, திருவேகம்பம், பெரும்பற்ற புலியூர், ஆரூர், கழுக்குன்றம் ஆகிய தலங் களும், இணைத்துப் பாடப்பட்டுள்ளன. திருமறைக் காடு (வேதாரண்யம் என வடமொழியாளரால் மொழி பெயர்த்துக் கொள்ளப்பட்டது) முத்துக்களைச் சங்குகள் வந்து ஈனும் கடற்கரைச் சோலேயை'வேலியாகச் சூழப் பெற்றது என்றும், ஏகம்பம் (காஞ்சிபுரம்) அழகுடையது என்றும், பூங்கச்சி என்றும் கரும்பும் புன்னேயும் நெருங்கிய சோலையுடையது திருவாரூர் என்றும், அருவி விளங்கும் திருக்கழுக்குன்றம் என்றும் மேலே குறிப்பிடப்பட்ட தலங்கள் சிறப்பிக்கப்பட்டுள்ளன.

மதுரையில் அரசாண்ட மன்னர்களில் ஒருவன் வங் கிய சூளாமணிப் பாண்டியன். அவன் தன் மனைவியின் கூங் தலில் உண்டாள மணத்தை நுகர்ந்தான். அது செயற் கையா இயற்கையா என்பதை அறிவிக்கும் புலவர் பெறு மாறு பொற்கிழி ஒன்றைச் சங்க மண்டபத்தில் கட்டிவைத் தான். அதனைப் பெறப் பலரும் முயன்றனர்.

அந்தச் சமயம் தருமி என்பவன் வறுமையால் வாடிக் கொண்டிருந்தான். அவன் வறுமையைத் தீர்க்க மதுரைச் சொக்கலிங்கப் பெருமான் "கொங்கு தேர், வாழ்க்கை” என்று தொடங்கும் ஒரு கவியைப் பாடித் தந்து பாண்டிய னிடம் கொடுத்துப் பொற்கிழியைப் பெறுமாறு கட்டளை இட்டார். (இக்கவியினைக் குறுந்தொகை என்னும், சங்க நூலில் காண்க) அப்பாட்டைக் கண்ட பாண்டியன் அதன் பொருள் மூலம் தன் மனேவியின் கூந்தல் மணம், இயற்கை என்று அறிந்து, பண முடிப்பைப் பெற்றுப் போகுமாறு தருமிக்கு உத்தரவு கொடுத்தான். அதனைப் பெறத் தருமி சென்ற போது, சங்கப் புலவர்களுள் தலைவரான நக்கீரர் பாட்டில் பொருள் குற்றம் இருப்பதாகக் கூறித் தருமி யைப் பொற்கிழி பெரு வண்ணம் தடுத்துவிட்டார். இந்தச்