பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
6

மதுரை திருவாலவாய் என்ற பெயரைப்பெற்றது. இத் தலத்து விருட்சம் கடம்பமரம் ஆதலின், கடம்பவனம் என்னும் பெயரையுடையது. சிவபெருமான் மீனாட்சியம்மையாருடன் இருந்து அன்பர்கட்குக் காட்சி கொடுப் பதனுல் பூலோககயிலாயம், சிவராஜதானி என்ற திருப்பெயர்களையும் பெற்றது. தமிழ்ச் சங்கம் இருந்த இடம் இதுவே. இத்தலத்தில்தான் சிவபெருமான் அறுபத்து நான்கு திருவிளையாடல்களைச் செய்தார். மூர்த்திநாயனுர் பிறந்து பின்பு விபூதி, உருத்திராட்சம், சடை முடிகளைக் கொண்டு அரசாட்சி செய்த இடம்.


நெடுமாறநாயனுர், இவரது மனைவியார் மங்கையர்க்கரசியார், மந்திரி குலச்சிறைநாயனுர் வாழ்ந்த இடம். வினாயகர், முருகன், இந்திரன். வருணன், இராமலட்சுமணர் பூசித்துத் தாம் தாம் விரும்பியதைப் பெற்ற தலம். இத்துணைப் பெருமை வாய்ந்த இத்தலம் மதுரை மீனாட்சி கோவில் என்ற பெயரால் சிறப்புற்று விளங்குகிறது. தருமபுர ஆதீன முதற்பெருங் குருமூர்த்தியாகிய குருஞானசம்பந்த சுவாமிகள் சொக்கலிங்கப் பெருமானைப் பெற்ற கோயில். இக்கோயில் மூன்று பிராகாரங்களையுடையது. ஒன்பது கோபுரங்களைக் கொண்டது. இங்கு ஆயிரக்கால் மண்டபம் அரியநாத முதலியாரால் கட்டப்பட்டது. அவரது உருவம் இம் மண்டபத்தின் முன்பாகம் உள்ள ஒரு தூணில் செதுக்கப்பட்டுள்ளது. மற்றொரு தூணில் உள்ள யாளியின் வாயில் குண்டு சுழன்று கொண்டிருக்கிறது. கோயிலுக்குக் கிழக்கில் வெளியில் வசந்த மண்டபம் உள்ளது. இது புதுமண்டபம் என்றும் கூறப்படும். இங்கு நாயக்க மன்னர்களின் உருவச் சிலைகளைக் காணலாம். மற்றும் பல உருவங்களையும் காணலாம்.


மதுரைக் கோயிலின் மதிலுக்குத் தனிப் பெருமையுண்டு. அதனால்தான் 'மதுரை மதில் அழகு" என்னும்