பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

செய்தியைத் தருமி சோமசுந்தரரிடம் விண்ணப்பித்துக் கொண்டபோது, இறைவர் புலவர் வேடம் பூண்டு நக்கீர ருடன் வாதம் புரியப் புறப்பட்டார். இந்த நிகழ்ச்சி யினேயே அப்பர் பெருமானர் "கன்பாட்டுப் புலவய்ைச் சங்கம் ஏறி நற்கனகக்கிழி தருமிக்கு அருளினேன்" என்று சிறப்பித்துப் பாடியருளினர்.

7. திருப்புனவாயில்

பாண்டிய நாட்டுப் பாடல் பெற்ற தலங்களுள் ஏழா வது தலம் இது. இதனைத் திருஞானசம்பந்தரும் சுந்தர மூர்த்தி சுவாமிகளும் பாடியுள்ளனர். ஆக இதற்குரிய பதிகம் இரண்டு என்க. இது வேதங்களால் பூசிக்கப் பெற்ற தலமாகும். இத்தலத்தில் பாண்டிய நாட்டுப் பாடல் பெற்ற தலங்களின் பதின்ைகு மூர்த்திகளே யும் ஒருசேரக் கண்டு தரிசிக்கலாம். இத்தலத்து மூல இலிங்கம் மிகப் பெரியது; கோயிலும் பெரியது: கந்தியும் பெரியது. இத்திருமேனியின் இலிங்க வடிவிற்கு மூன்று முழப் பரிவட்டமும், ஆவுடையாளுக்கு முப்பது முழப் பரிவட்டமும் தேவை. இதல்ை இந்தத் தலத்தில் 'மூன்று முழமும் ஒரு சுற்று, முப்பது முழமும் ஒரு சுற்று' என்னும் ஒரு பழமொழியும் வழங்கப்பட்டு வருகிறது. இத் தலத்தின் பொந்துகளில் ஆங்தைகள் எப்போதும் குடியாக வாழ்ந்துகொண்டிருக்கும். இதனை உற்றுக் கவனித்த சுந்தரர் "பொந்தில் ஆங்தைகள் பாட்டருப் புனவாயில்” என்றும் பாடியுள்ளார். இது மிகப் பழம் பெருங் தலம் என்பது சுந்தரர் தம் திருவாக்கால் இதனைப் பழம்பதி' என்றும், 'விருத்தபுரி என்றும் குறிப்பிடுவதால் அறிந்து கொள்ளலாம். இத்தலத்து ஊருக்குச் தெற்கே பாம்பாறு (சர்ப்பகதி)ஓடுகிறது. சர்ப்பாதி என வடமொழியாளர் பாம் பாறு என்பதனை மொழி பெயர்த்துக் கொண்டனர் என்பர்.