பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

ஏழாம் திருமுறை பதிகம் 50 பண்-பழம் பஞ்சுரம் 1. சித்த நீநினை என்னுெடு சூளரும் வைகலும்

மத்த யானையின் ஈர்உரி போர்த்தம ணுளனூர் பத்தர் தாம்பலர் பாடிநின் ருடும் பழம்பதி பொத்தில் ஆந்தை கள்பாட் ட்ருப்புன வாயிலே (அ. சொ.) சித்த-மனமே, சூள்-பொய்யாக மேற் கொண்ட உறுதிமொழிகள், வைகலும்-தினமும், மத்தம்செருக்கு, உரி-தோல், பொத்து-மரப் பொந்து, அருநீங்காத. 2. பொடியாடு மேனியன் பொன்புனம் சூழ்புனவாயில்

அடியார் அடியன் நாவல ஊரன் உரைத்தன மடியாது கற்றிவை ஏத்தவல் லார்வினை மாய்ந்துபோய்க் குடியாகப் பாடிநின் ருட்வல் லார்க்கில்லை குற்றமே

(அ. சொ.) பொடி-திருநீறு, ஆடு - பூசப்பட்டுள்ள, பொன்-அழகிய, புனம்-கொல்லைகள், நாவல ஊரன் - திரு காவலூரன் என்னும் சுந்தரர், மடியாது-சோம்பல் அடை யாது. வினே-தீவினைகள்.

இப்பதிகத்தால் திருப்புவனவாயிலைப் பற்றிய அரிய குறிப்புக்கள் தெரிய வருகின்றன. இது பழம் பதியாகும். இப்பதியில் பத்தர்கள் பாடி ஆடிப் பரமனைப் போற்றுவர். இது விளைவயல் மிகுந்த இடம் ஆதலின், இவ் விளைவயல உழுது பயிரிட்டு வாழ்பவர் வானவர் என்றே சுந்தரரால் சிறப்பிக்கப்பட்டுள்ளனர். வேடுவர்களும் இங்கு மிகுதி. அவர்கள் கல்ல வீரமும் உடையவர். வியாபாரிகள் கூட்டம் கூட்டமாகச் செல்லும் இடம். அவர்கள்.செல்லும் கூட்டம் சாத்து என்று கூறப்படும். இவர்களும் வேடர்களும் ஒரு வர்க்கொருவர் போர் இட்டுச் கொள்ளுதலும் உண்டு. அச் சண்டையினையும் இங்கு காணலாம். இத்தலம் அடிக்கடி அன்பர்கள் வந்து தரிசித்துச் செல்லுதற் குரியதாகவும்