பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

இவ்வாருன காட்சிகளைச் சுந்தரர் இத்தலத்துக்குச் சென்றபோது கண்டு களித்தார். ஆதலின், அவை அனைத்தையும் இப்பதிகத்தில் இணைத்துப் பாடிவிட்டனர்.

இப்பதிகத்தில் சுந்தரர் தம் மனத்துச்கு அறிவுறுத்தும் செய்திகள் பலவாகும். மனத்தை நோக்கி, "மனமே ே திருப்புனவாயிலே நினை. அப்படி நினைத்தால் பொய்யாக மேற்கொண்ட உறுதிமொழிகள் எல்லாம் அற்றுவிடும். நீ தைரியமாக இரு திருப்புனவாயிலே மறவாறே வருத்தம் இன்றி c நினைப்பாயாக வல்வினே எல்லாம் ஒழிந்துபோகத் திருப்புனவாயிலை கினே. வேறு எதுவும் உனக்கு வேண்டா' என்று உபதேசம் செய்கின்ருர்.

இப்பதிகத்தில் 'பொற்குன்றம் சேர்ந்ததோர் காக்கை ப்ொன்னம்" என்னும் அருமையான கருத்துடைய தொடர் அமைந்துள்ளது. இப்பதிகத்தை யார் படித்து இறைவனை ஏத்துகின்ருர்களோ அவர்களின் வினைகள் ஒழிந்து குற்ற மும் இல்லாமல் போகும் என்னும் கருத்தும், சுந்தரர் தம்மை 'அடியார் அடியன்' என்று குதுாகலத்துடன் கறிக்கொள்ளும் கருத்தும் ஈற்றுப் பாடலில் உள்ளன.

8. திருவிராமேச்சுரம்

இத்தலம் பாண்டிய காட்டுப் பாடல் பெற்ற தலங் களில் எட்டாவது. இத்தலத்தைத் திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் பாடியுள்ளனர். இத் தலத்திற்குரிய பதிகம் மூன்று. இரண்டு திருஞானசம்பந்தரால் பாடப் பெற்றவை. ஒன்று திருநாவுக்கரசரால் பாடப்பட்டது.

இராமன் இராவண சம்ஹாரம் செய்தான். அதனல் அவனுக்குத் தோஷம் ஏற்பட்டது. அத் தோஷத்தைப் போக்கிக்கொள்ள இத்தலத்தில் இலிங்கஸ்தாபனம் செய்து இறைவன்ப் பூசித்து அத்தோஷம் நீங்கப்பெற்ருன். இந்தச்