பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

கோபுரம் மட்டும் முழுமையும் கட்டப்பட்டுக் காட்சி அளிக்கிறது. ஏனேய கோபுரங்கள் முற்றுப்பெறும் பேறு பெறவில்லை. இராமநாதஸ்வாமி கர்ப்பக் கிரஹத்தில் பல கல்வெட்டுக்கள் உள. இத்தலத்தில் மாசி மாதம் பிரம் மோற்சவமும், ஆடி மாதம் அம்மன் உற்சவமும் கடை பெறும். அம்மன் தபசும் அம்மன் திருக்கல்யாணமும் கண்டு இன்புறுதற்குரியவை. தினமும் கடக்கும் அர்த்தசாமப் பள்ளியறைக் காட்சி கண்டு களித்தற்குரியது.

இத்தலத்து இறைவர் இராமநாதர், இராமகாதேஸ்வரர் என்றும், இறைவியார் பர்வதவர்த்தனி, மலைவளர். காதலி என்றும் கூறப்படுவர். இங்கு சிறப்புடை தீர்த்தங்கள் அக்கினி தீர்த்தம், இராம தீர்த்தம், இலட்சுமண தீர்த்தம்,

தனுஷ்கோடி முதலியன.

இத்தலம் இராமேஸ்வர ரயில் கிலேயத்திற்கு அருகில் உள்ளது. சுமார் ஒரு மைல் தொலைவில் உள்ளது. இங்கு பல சத்திரங்கள் உண்டு. தங்குதற்கு எல்லா வசதிகளும் உண்டு. இத் தொண்டில் இங்குள்ள பிராமணர்கள் அதிகம் ஈடுபட்டு யாத்திரை காரணமாக வரும் அன்பர் கட்குப் பல விதத்திலும் பெரிதும் உதவி செய்கின்றனர்.

இக்கோயிலுக்கு இரண்டு கல் தொலைவில் கந்த மாதனகிரி என்ற மணல் மேடு இருக்கிறது. இங்கு ஒரு சிவாலயம் உண்டு. மணல் மேட்டில் இரண்டு பாதங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றை இராமர் பாதம் என்பர். இராமேஸ்வரத்திலிருந்து தெற்கே படகின் மூலம் 18 கல் சென்ருல், தனுஷ்கோடியை அடையலாம். இராமேஸ்வர ரயில் கிலேயத்திலிருந்து தனுஷ்கோடி நிலையத்தையும் அடையலாம். கிலேயத்திலிருந்து ஸ்னை கட்டம் சிறிது தொலைவில் இருக்கிறது. மணலில் நடக்க வேண்டும். இராமன் தன் தனு(வில்) முனையால் கிறித் தீர்த்தம் உண்டாக்கினமையால் தனுஷ்கோடி என் ற பெயர் பெற்றதாகக் கூறுவர்.