பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
7
7.

பழமொழியும் வழங்குவதாயிற்று. வெளிப் பிராகாரத்தில் உள்ள ஒரு பெரிய கல் தூணில் பல சிறிய தூண்கள் அடங்கியிருக்கின்றன. இத்துாணைத் தட்டினால் ஏழ் இசை ஒலிகள் கேட்கும்.

கோயிலுக்குள் பார்க்கக் கூடியவை :

மீனாட்சியம்மன் சைந்திக்கு வடக்கே உள்ள ஒரு பழைய கோயில் நந்தீஸ்வரர் கோயில். இது சுவாமி சந்கிதியில் திருவாயிலின் பக்கத்தில் வடக்கு முகமாக இருக்கிறது.

பொற்ருமரைக்குளம் கோயிலுக்குள் உள்ளது. இக் குளத்தைச் சுற்றியுள்ள மண்டபங்களில் இத் தலத்தில் சோமசுந்தரப்பெருமான் நடத்திய அறுபத்துநான்கு திரு விளையாடல்கள் சித்திரத்தில் எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். இக்குளத்தில் பொற்ருமரை இல்லை என்று , இப்போது, காசிமடத்துத் தலைவராம் திருப்பனஙந் தாள் பூநீலபூரீ காசிவாசி அருள்கந்தித் தம்பிரான் சுவாமிகள் செய்தமைத்த பொற்ருமரை ஒன்று மிதந்து கொண்டிருப்பதைக் கண்கூடாகக் காணலாம்.

அர்த்த மண்டபம், மகா மண்டபம், மணி மண்டபம், அறுகால்பீடம் முதலியவற்றைக் காணலாம். இவைகளே அன்றி அஷ்டசித்தி மண்டபம், மீனட்சி நாயக்கர் மண்டபம், கல்யாண மண்டபம், வீரவசும்புரான மண்டபம், ஆடிவீதி, கிறுதி வீதி மண்டபம், சம்பந்தர் மண்டபம், அறுபத்துமூவர் மண்டபம் முதலியனவும் உண்டு.

இந்த ஆலயத்துள் ஐந்து சபைகளையும் காணலாம். அவையே கனகசபை, ரசிதசபை, இரத்தினசபை, தாம்ர சபை, இந்திரசபை. ரசிதசபையாகிய வெள்ளியம்பலத்தில் உள்ள மற்றைய நடராஜ உருவங்களைப்போல் இடக்காலைத் தூக்கி நடனம் பண்ணுமல் வலக்காலைத் துாக்கி கடனம் புரியும் பாவனையில் காட்சியளிக்கிருர். இது