பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

இராவணனைக் கொன்றதல்ை ஏற்பட்ட பழியினைப் போக் கிக்கொள்வதற்காகும் என்பதும், முக்கியமாக அறியப்படு கின்றன. இராமேஸ்வரம் கடற்கரையோரத்தில் உள்ள தலம் என்பதற்கேற்பத் தாழைகள் வளர்ந்துள்ள கடற் கரைச் சோலைகளையுடையது. புலால் காற்றமும் வீசப் பெறுவது. இந்த இடத்தை இறைவர் ஆட்சியாகக் கொண் டுள்ளார். இத்தலம் இராமன் பூசிப்பதற்குமுன்பு இல்லாமல் இராமன் பூசித்த பிறகே ஏற்பட்டது என்பது, 'அண்ணல் (இராமன்) செய்த இராமேச்சரம்” என்னும் அடியால் விளங்குகிறது. இராமேச்சரம் பாவம் போக்கும் தலங் களில் மிக முக்கியமானது. அத்தலத்தை அடைந்த கல் மன முடையவர் பாவம் நீங்கும் என்பதை இப்பதிகம் அறிவித்து நிற்கிறது. இறைவன் ஈண்டு அன்பர்கட்கு அருள் செய்யும் பொருட்டு ஞானமும், கன்பொருளும் ஆகி கிற்கின்ருன். இவ்வாறு நிற்பது கம் நன்மைக்கே ஆகும். இத்தலத்துப் பெருமானது திருப்பெயரைப் போற்றினலே நோய் நீங்கும். இறைவன் தனக்குவமை இல்லாதவன் என்பது வள்ளுவர் போன்ருர் கருத்து. அதனை அவரே "தனக்குவமை இல் லாதான்” என்றே குறிப்பிடுகிருர். அக்கருத்தே இங்கு "இணையிலி என்றும் இருந்த கோயில்' என்று கூறப் பட்டுள்ளது. இணியிலி மட்டும் அல்லன். தன் செயலுக்குப் பிறர் துணையும் வேண்டாதவன். ஆதலின் துணையிலியும் ஆவன். இவன் பாதம் போற்றத் துயர் நீங்கும். இராமன் இறைவனே வழிபடும்போது, 'வினே மூடிட இனி அருள் கல்கிடு என்று வேண்டினன். இறைவன் தான் ஒருவகை இருந்தாலும், பலவாக இருக்கும் பொருள்களும் அவன் வடிவங்களே என்னும் குறிப்பும் இங்கு உண்டு. இறுதியில் ஞானசம்பந்தர் மக்களே கோக்கி 'உமக்கு அருள் ஆக வேண்டுமானல் செல்வனே ஏத்தி வாழ்மின்' என்று உபதேசம் செய்கின்ருர். மேலும், தம் திருக்கடைக் காப்பில், இத்திருப்பதிகத்தைத் தம் அறிவால் எங்குப்