பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

பாவம் யாரை வழி பட்டால் போகும் என்பதை அறிந்து இராமன் இத்தலத்தைக் கண்டு இறைவரைத் தாபித்துப் பூசித்ததால் 'மதியினல் மால் செய் கோயில் என்று இத் தலம் சிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பதிகம் மக்க ளுக்கும், தம் நெஞ்சுக்கும் கல் அறிவு புகட்டும் முறை யில் பாடப்பட்டுள்ளது. "நேசமிக்கு அன்பினல் நீங்கள் கினையுங்கள்” என்று மக்களை நோக்கியும், "மனமே இரா மேச்சுரத்தையே சரணுகப் பற்றி ஈசனிடத்தே போற்று தல்செய்க; நீ ஆன்மையை உணர்ந்தால் இத்தலத்தை அடைந்து தொழுது பிழைக்க; இறைவரைச் சேர்க, இரா மேச்சுரம் சேர்க. இத்தலத்தைத் தேடி வாழ்ந்தால் உனக்கு கன்னெறி கூடும்” என்றும் கூறி நெஞ்சிற்கு அறி வுறுத்தின்ர்.

இராமேச்சரத்தை வேண்டிக் கொள்ளும் குணம் மிக்கு ஆர்வத்தால் கூடுபவர் நல்ல குறிப்புடையவர் என்பது அப்பர் கருத்தாகும். இத்தலத்தைத் தம் கண்களால் கண்டு வணங்குபவர்களுக்கு நோய், வினே முதலியன நாளுக்கு காள் குறைந்து போகும். மேலும், யார் தலையினல் வணங்கு கின்ருர்களோ, அவர்கள் தவத்தில் ஆழ்வர் என்பதும், தலைவனம் சிவபேருமான் இடத்தே வணங்கும் பேறு பெறுவர் என்பதும் இராமேச்சர வணக்கத்தால் ஏற்படும் பேருக அப்பர் பெருமான் குறிப்பிடுகிரு.ர்.

பெரும் பாலும் அப்பர்பெருமான் தம் ஈற்றுப்பாடலில், அப்பதிகத்தை ஒதுவதால் ஏற்படும் பயன் இன்னது என் பதைக் குறிக்கும் வழக்கம் இல்லாதவர். ஆல்ை, இவ்விடத் தில் இப்பதிக ஈற்றுப்பாடலில் யார் இப்பத்துப் பாடல்களே உரைக்கின்றனரோ அவர்கள் அன்பினல் இறைவர் மனத் தால் கினைக்கும் பேறுபெறுவர் என்று குறிப்பிடுகின்ருர்.

இதில் வரும் அருந்தொடர்: "திரைகள் (அலேகள்)முத் தால் வணங்கும் திரு இராமேச்சுரம்" என்பது.