பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77

தலம் தேவர்களாலும், அந்தணர்களாலும் பூசிக்கப்படுவது. இப்பதிகத்தைப் பாட கோயும் நீங்கும். சிறப்புத் தொடர்கள்:

'ஏத்துவார்தமை வாதியாவினே' 'மலர்தூவிக் கைதொழ வீடும் நுங்கள் வினைகள்' "நாள்தொறும் வலங்கொள்வார் வினைமாயும்” "கைதொழத் தீயவல்வினை திருமே.”

10. திருக்கானப்பேர்

இத்தலம் பாண்டிய நாட்டுப் பாடல் பெற்ற தலங்க ளுள் பத்தாவது. இதனைத் திருஞானசம்பந்தரும், சுந்தர ரும் பாடியுள்ளார். ஆகவே இதற்குப் பதிகம் 'இரண்டு. இத்தலத்தைக் காளையார் கோவில் என்று கூறுவர். இதற் குக் காரணம் சுந்தரர் சேரமான் பெருமாள் நாயனருடன் திருச்சுழியலில் சுவாமி தரிசனம் செய்து, அங்குத் தங்கி இருந்தார். அன்று இரவு திருக்கானப்பேர் இறைவர் காளே வடிவுடன் கையில் பொற் செண்டும், முடியில் சுழியமும் கொண்டு சுந்தரர் கனவில், "யாம் இருப்பது கானப்பேர்" என்று கூற, மறுநாள் காலேயே இத்தலத்தை நோக்கிப் புறப்பட்டு, "கண்டு தொழப் பெறுவது என்று கொலோ அடியேன் கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே” என்று பாடிப்பரவினர். இத்தலத்திற்குக் காளிபுரம் என்ற பெயரும் உண்டு.

இத்தலம் பெரியது. கோபுரமும் பெரியது. இத்தலத் தில் மூன்று சங்கிதிகள் உள்ளன. முதலாவது, சோமேசர், செளந்தர நாயகி சங்கிதி; இாண்டாவது காளிசர், சொர்ண வல்லி சங்கிதி, மூன்ருவது சுந்தரேசர், மீனட்சி சங்கிதி. பெரிய கோபுரம் சோமேசர் சங்கிதிக்கு நேரே இருக்கிறது. இத்தலத்துத் தெப்பல் உற்சவம் சிறப்பானது.