பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

இத்தலத்தில் காட்டானேயாகச் சாபம் ஏற்ற ஐரா வதம் என்னும் யானை பூசித்துச் சாபம் நீங்கியது. இதனைத் திருஞானசம்பந்தர் இத்தலத்து முதற்பாடலிலேயே பாடி யுள்ளார். கெளண்டில்ய ரிஷியும் பூசித்துப் பேறுபெற் றுள்ளார்.

இத்தலத்துத் தீர்த்தம் யானை மடு, புட்பல தீர்த்தம் முதலியன. இறைவர் சோமேஸ்வரர், பூநீகாளிஸ்வரர், பூரீ.சுந்தரேஸ்வரர், காளையப்பர், காளை யீஸ்வரர் என்றும், தேவியார் சுவர்ணவல்லி, மீனட்சி, செளந்தரநாயகி என் றும் கூறப்படுவர்.

இத்தலத்தை காட்டரசன் கோட்டை ரயில் நிலையத்தி லிருந்து 6 கல் சென்றேனும், திருவாடானைக்கு மேற்கே 21 கல் சென்றேனும், தேவகோட்டைக்குத் தென்மேற்கே 15 கல் சென்றேனும், மதுரைக்குக் கிழக்கே சிவகெங்கை வழியே 39 கல் கடந்தேனும், மானமதுரை ரயில் கிலேயத்தி லிருந்து 11 கல் சென்றேனும் அடையலாம். எல்லாவழி களிலும் பஸ் வசதி உண்டு.

மூன்ரும் திருமுறை பதிகம் 26

பண்-கொல்லி 1. பிடியெலாம் பின்செலப் பெருங்கைமா மலர்தlஇ

விடியலே தட்மூழ்கி விதியினுல் வழிபடும் கடியுலாம் பூம்பொழில் கானப்பேர் அண்ணல் நீர் அடியலால் அட்ைசரண் உடையரோ அடியரே (அ. சொ.) பிடி-பெண் யானைகள், கைமா-யானை (ஈண்டு ஐராவதம் என்னும் தெய்வலோக யானை) தடம்குளம், கடி-வாசனை, பொழில்-சோலை, அண்ணல்-தலை வனே! 2. காட்டகத் தாட்லான் கருதிய கானப்பேர்

கோட்டகத் திளைவரால் குதிகொளும் காழியான்