பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79

நாட்ட்கத் தோங்குசீர் ஞானசம் பந்தன் பாட்டகத் திவைவலார்க் கில்லையாம் பாவமே. (அ. சொ.) காட்டகத்து-சுடலையில், கோட்டகம்கரை, ஆழமான நீர்நிலை, காழியான்-சீர்காழிப் பதித் தலைவரான திருஞானசம்பந்தர், நாட்டகத்தில்-காட்டில், சம்பந்தன்-திருஞானசம்பந்தர் பாடியுள்ள.

இப்பதிகத்தால் கானப்பேர் ஊரைப்பற்றிப் பல வற்றை அறியலாம். முதலாவது இஃது ஐராவதம் என்னும் யானையால் பூசிக்கப்பெற்றது என்பதை இப்பதிக முதற் பாடலாலும் ஏழாவது பாடலாலும் அறியலாம்.

இத்தலத்து இயற்கை அழகுகள் இனிதின் எடுத்துப் பேசப்பட்டுள்ளன. இங்குள்ள சோலைகள் மலர் நிறைந்து மணம் உடையனவாய் இருந்தன. இங்குள வண்டுகள் குளங்களில் சிலபோது தங்கிப் பிறகு செங்குவளே மலர் களே அடைந்து பண் பாடும். மான் கூட்டங்களும், குரங் குக் கூட்டங்களும் நிறைந்த காடுகள் நிறைந்து, தேனும் மிக்கு, மணம் கமழும் இடம் கானப்பேர் ஆகும். யானைகள் கொழுங் கொடிகளைக் கறித்துச் செல்லும் இடமும் ஆகும். ஆண் யானை முன் செல்லப் பெண் யானைகள் பின் சென்று வழிபட்டன என்னும் செய்தி இப்பதிகத்தில் குறிப்பிடப் பட்டிருப்பதை நோக்கின், அஃறிணைப் பொருள்களுள்ளும் ஆண் இனத்திற்கு முதற்பெருமை உண்டு என்பதை அறி தற்கே யாகும் என்பதை உணரலாம். 'அவன் அவள் அது” என்று தானே நமது சாத்திரமும் கூறுகிறது.

திருஞானசம்பந்தர் இத்தலத்துப் பதிகத்தின் மூலம், அடியவர்கட்குக்கானப்பேர் உறையும் இறைவன் காரணமே அரண் என்பதையும் விண்ணிடைச் செல்லும் விருப்புடை யார் இத்தலத்தை அடைதல் வேண்டும் என்பதையும் இத்தலத்தை அடைந்தவர்க் கல்லால் குற்றம் ங்ேகாது என்பதையும், இத்தலத்தைத் தொழுபவர் தீதற்றவர்