பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85

நண்ணிய அருமறை ஞான சம்பந்தன் பண்ணிய தமிழ்சொலப் பறையும் பாவமே.

(அ. சொ. உறை-வாழும், அண்ணல்-பெருமையில்) சிறந்த சிவபெருமான், அம்-அழகு, கண்ணிய-பொருந்திய, பறையும்-நீங்கும்.

இப்பதிகம் திருப்பூவணத்து இறைவர் திருவடிகளைத் தொழ நன்மை உண்டாகும் என்பதை அறிவுறுத்துகிறது. இதிலும், திருப்பூவணத்து இயற்கை அழகு கூறப்படுகிறது. இங்குள்ள சோலைகளில் வண்டுகள் மலர்களில் ஒலித்துக் கொண்டிருக்கும் என்பது பேசப்படுகிறது. திருப்பூவணம், "துயர் நீங்கவேண்டும். நோயும் வினையும் ஒழிய வேண்டும், என்னும் எண்ண முடையவர்களால் வணங்கப்படுவதை உணரலாம். இதல்ை இத்தலத்தைத் தொழுபவர் நோயும் துயரும் தீரும் என்பது புலகிைன்றது. இத்தலத்துச் சோலையில் குருந்தம், மாதவி, கொங்கம், மல்லிகை, புன்னே, முதலிய மலர்ச் செடிகள் மிகுதியாகும்.

திருஞானசம்பந்தர் இறைவனே மலர்மாலே புனைந்து போற்றுவதையே இன்பம் என்கின்றனர். நம் கட மையும் இதுவாகும் என்று அறிவுறுத்துகின்றனர். திருப்பூவணம் புண்ணியர்களால் தொழப்படுவது என்பது திருஞானசம் பந்தர் கருத்து. இப்பதிகம் பாடப் பாவம் ஒழியும் என்ப தையும் உணர்க. இப்பதிகத்தில் 'அடிதொழ நன்மை யாகும். 'அடிதொழப் பிழை இல்லை,” “கழல் தொழ அல்லல் இல்லை." "அடியவர்க்கு இல்லை பாவம்" "மலர் புனைந்து ஏத்தல் இன்பம், "அடிதொழுதேத்தல் இன்பம்' என்பன என்றும் மறவாது நம் மனத்தில் கொள்ள வேண்டிய தொடர்களாம்.

6