பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

ஆரும் திருமுறை பதிகம் 13 திருத்தாண்டகம் 1. வடியேறு திரிசூலம் தோன்றும் தோன்றும்

வளர்சடைமேல் இளமதியம் தோன்றும் தோன்றும் கடியேறுகமழ் கொன்றைக் கண்ணி தோன்றும்

காதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும் இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும்

எழில்திகளும் திருமுடியும் இலங்கித் தோன்றும் பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்

பொழில்திகழும் பூவணத்துஎம் புனித னுர்க்கே (அ. சொ.) வடி-கூர்மை, ஏறு-ஏறிய, கடி-வாசனே கண்ணி-மாலை, குழை-ஆண்கள் காதணி, தோடு-பெண்கள் காதணி, இறைவர் அம்மை அப்பர் வடிவுடன் திகழ்தலால் இவ்வாறு கூறினர். இடிஏறுகளிற்றுரிவை-இடிபோல முழங்கும் யானையின் தோல், எழில்-அழகு, இலங்கிவிளங்கி திரு-அழகிய, பொடி-விபூதி, பொலிந்து-விளங்கி, பொழில்-சோலே, புனிதன்-தூய்மையான இறைவன். 2. ஆரொருவர் உள்குவார் உள்ளத் துள்ளே

அவ்வுருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும் வாருருவப் பூண்முலைநல்மங்கை தன்னை

மகிழ்ந்தொருபால் வைத்துகந்த வடிவம் தோன்றும் நீருருவக் கடலிலங்கை அரக்கர் கோனை

நெறுநெறென அடர்த்திட்ட நிலையும் தோன்றும் போருருவக் கூற்றுதைத்த பொற்புத் தோன்றும்

பொழில் திகழும் பூவனத்துஎம் புனிதனுர்க்கே (அ. சொ.) உள்குவார்-கினேப்பவர், வார்-கச்சு, உகந்த-மகிழ்ந்த அடர்த்திட்ட-அழித்த, கூற்று-இயமனது துாதன், பொற்பு-அழகு.

இப் பதிகத்தில் முருகப்பெருமான் இணைத்துப் பேசப்பட்டிருக்கின்ருர். மேலும் இதில் 'மணியார்';