பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87

வைகைத் திருக்கோட்டில் கின்றதோர் திறமும் தோன் றும்” என்ற குறிப்பும் உண்டு. இது வந்தி என்னும் வாணிச்சியின் பொருட்டு வைகை நீர் வெள்ளத்தைத் தடுக்க வந்த இறைவர் கூலிஆளாக நின்ற திருக்கோலக் குறிப்பை அறிவிப்பதாகும். சண்டீச நாயனர்க்கு முடிமாலே அணிந்ததையும் இத்தாண்டகப் பதிகம் அறிவிக்கின்றது. இறைவர் யார் யார் எவ்விதத் தோற்றத்தோடு கினேக் கின்றனரோ அவர் அவர்கட்கு அவ்விதத் தோற்றத் தோடு சென்று அருள்புரியும் நிலையும் இதில் அழகுறப் பாடப்பட்டுள்ளது.

ஏழாம் திருமுறை பதிகம் 11 பண்-இந்தளம் 1. திருவுடிை யார்திரு மாலய னுலும்

உருவுடை யார்உமை யாளையோர் பாகம் பரிவுடை யார்.அமை வார்வினை தீர்க்கும் புரிவுட்ை யார்உறை பூவணம் ஈதோ (அ.சொ.) திரு-அழகு, அயன்-பிரமன், பரிவு-அன் பாக, புரிவு-விருப்பம்.

2. சீரின் மிகப்பொலி யும்திருப் பூவணம்

ஆர விருப்பிட் மாஉறை வானை ஊரன் உரைத்தசொல் மாலைகள் பத்திவை பாரி லுரைப்பவர் பாவம் அறுப்பரே

(அ. சொ) பொலியும்-விளங்கும், ஆர்-பொருந்த, ஊரன்-திருகாவலூரகிைய சுந்தரர், பாரில்-பூமியில்.

திருப்பூவணநாதர் தம்மை எண்ணியும் இருந்தும், கிடக் தும் கடந்தும், அண்ணலே என்று கூறியும் அடைந்தவர் எவராயினும் அவர்கள் வினையைப் போக்குவர். இத்தலத்து இறைவி திருப்பெயர் மின்னனையாள் எனப் பதிகம் கூறு வதைக்காணலாம். இறைவர் தம்மை மனம் உருக கினைப்