பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95

திருஞானசம்பந்தர் இப்பதிகப் பாடல்தோறும் இத் தலத்தை கன்னகர் என்று குறிப்பிடுவதால் இதன் பெருமை மேலும் புலகிைறது. இங்குள்ள தொண்டர்கள் திருநீறு பூசிய திருமேனியராய்ச் செல்வர். இங்கு கொடிகள் கட்டப்பட்டுத் திருவிழாக்களும் சிறந்து விளங்கும்.

சமணர்கள் கின்றுகொண்டு உண்பவர் என்பதும், பெளத்தர்கள் அமர்ந்து உண்பவர் என்பதும் இப்பதிகத் தால் அறியும் குறிப்புக்கள். திருஞானசம்பந்தர் தம்மை 'கற்றமிழ் வல்ல” என்று கூறிக்கொள்வதைக் காண்க. இப்பதிகப் பாடல்களைப் பாடப் பாவம் ஒழியும் என்பதை யும் உணர்க.

இரண்டாம் திருமுறை பதிகம் 71

பண்-காந்தாரம்

திருந்த மதிசூடித் தெள் நீர் சடைக்கரந்து தேவி பாகம் பொருந்திப் பொருந்தாத வேட்த்தால் காடுறைதல் புரிந்த செல்வர் இருந்த இடம்வினைவில் ஏலம் கமழ்சோலை இனவண்டி யாழ்செய் இருந்த மணநாறும் குன்றிடம் சூழ்தண்டிசாரல் குறும்பலாலே

(அ. சொ.) மதி - சந்திரன், தெள் நீர் - கங்கையாறு, கரந்து-மறைத்து, உறைதல்-வாழ்தல், புரிந்த-விரும்பிய, குருந்தம்-குருந்தமர மலர், காறும்-மணக்கும்.

கொம்பார் பூஞ்சோலைக் குறும்பலா மேவிய கொல்லேற் றண்ணல் நம்பான் அடிபரவு நான்மறை யான்ஞான சம்பந்தன் சொன்ன இன்பாய பாடலிவை பத்தும் வல்லார் விரும்பிக் கேட்பார் தம்பால தீவினைகள் போயகலும் நல்வினைகள் தளரா அன்றே.

(அ. சொ.) கொம்பு-கிளேகள். ஆர்-பொருந்திய, கொல் லேற்றண்ணல்-கொல்லும் இயல்புடைய எருதை வாகன மாகக் கொண்ட இறைவராம், கம்பான்-சிவபெருமான், பரவும்-போற்றும், தம்பால்-தம்மிடம் அமைந்த.