பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

திருக்குறும்பலாத் தலத்தின் இயற்கை வளம் வெகு அழகாக இப்பதிகத்தில் சித்திரிக்கப்பட்டுள்ளது. இத்தலத் தில் ஏலம், மணம் வீசும் சோலேகளும் குருந்த மலர் மணம் வீசும் குன்றுகளும், குளிர்ந்த மலேச்சாரலும் உண்டு.

வண்டுகள் யாழ் போல ஒலித்துக்கொண்டிருக்கும். பெண் குரங்குகள் ஒரு கிளேயிலிருந்து மறு கிளைக்குத் தாவிக்கொண்டு இருக்கும்; வேர்ப்பலாவைக் கிண்டி உண்டு கொண்டிருக்கும். ஆண் குரங்குகள் பலவிதப் பழங்களே உண்டு துள்ளிக்கொண்டிருக்கும் வெண்காந்தள் மலர் களின் மணம் வீசிக்கொண்டிருக்கும். பெண் வண்டுகள் மலர்களே மலர்த்தி அவற்றின் மகரந்தப் பொடிகளே உதிரும்படி செய்யும். நீல மலராகிய குவளை மலர்ந்து அதன்மீது வண்டுகள் ஒலிக்க மயில்கள் ஆடிக்கொண் டிருக்கும். இங்கு வாழை மரங்களும் மாமரங்களும் மிகுதி. இவற்றின் கனிகள் தேனேச் சிந்திக்கொண்டிருக்கும். மூங்கில்கள் அடர்ந்து காணப்படும். மலையினின்று பொசி யும் நீர், பொன்னேக் கொழித்துக்கொண்டு கீழ்நோக்கிப் பாயும். வண்டு ஒலியைக் கேட்டுக் குயில்களும் அவ்விசை யைப் பயிற்சி செய்யும். பன்றிகள் இங்கும் அங்கும் திரிந்து கொண்டிருக்கும். இங்குள்ள இசை அரங்குகளில் மத்தள ஒசை ஒலித்தவண்ணம் இருக்கும். அருவிகள் மணிகளைக் கொழித்து, வயிரங்களைத் தன்னகத்தே கொண்டு நீர்மிக்குக் காணப்படும். குங்கும மலரும், மல்லிகையும், சண்டகமும் இருகரைகளிலும் மலர்ந்திருக்கக் குரவமலர் நகை செய்வது பேர்ல் மலர்ந்து விளங்கக் குன்றுகள் சூழ்ந்திருக்கும். மூங்கிலின் உச்சியில் குரங்குகள் அமர்ந்து அதனே வளேயு மாறு செய்து கூத்தாடிக் குதிக்க, அவற்றைக் கண்டு வேடு வர்கள் 'குய் என விளித்துக் கையைக் கொட்டுவர்.

இவ்வாறு இயற்கை வளம் கிறைந்தது குறும்பலா என்று கூறியதோடு கில்லாமல், இங்குள்ள யானைகள்