பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

தாருகாவனம், பிரமவிருத்தபுரம் என்றும் இத்தலம் கூறப் படும். பிரம்மா, விஷ்ணு, அகஸ்தியர் இத்தலத்து இறை வரைப் பூசித்துப் பேறுபெற்றனர். இறைவரது பிட்சாட ணத் திருவுருவம் இங்கு கண்டு களித்தற்குரியது. இதனை முதற் பிரகாரத்தின் மேற்குப் பக்கத்தில் காணலாம். இறைவர்க்குரிய ஐந்து சபைகளுள் ஒன்ருன தாமிரசபை இங்குத்தான் உண்டு. இது பெரிய சிவாலயம். நடராஜர் திருவுருவமும் பெரியது.

இத்தலத்தில் நடைபெறும் பிரம்மோற்சவம் ஆனி மாதத்தில் ஆரம்பமாகும். 45 நாட்கள் நடைபெறும், 9-ஆம் நாள் உற்சவத்தில் அம்பிகை கிருஷ்ண வேடம் கொண்டு காட்சி அளித்தல் பார்க்கத்தக்கது. நெல் கொண்டு காட்சி அளித்தல் பார்க்கத்தக்கது. நெல் வேலி கட்டின திருவிளே யாடல் தை மாதம் நடைபெறும். திருக்கல்யாண மகோற்ச வம் ஐப்பசிமாதம் நடக்கும். வசந்தோற்சவமும் இத்தலத்தில் பார்க்கத்தக்கதாகும். இத்தலத்தில் உள்ள கற்றுாண்களுள் சிலவற்றைத் தட்டினல் இசை முழக்கம் வெளிவரும். கடுமண்டபத்தில் பாண்டியர்களின் உருவங்களைக் காண லாம். சுவாமி சங்கிதானமும், அம்மன் சங்கிதானமும் அடுத்து அடுத்து அமைந்துள்ளன. சுவாமிகோயிலில்முன்று கோபுரங்களும், அம்மன் கோயிலுக்கு மூன்று கோபுரங் களும் இடையில் ஒரு கோபுரமும் உண்டு. அம்மன் கோயில் கோபுரம் உயர்வுடையது. ஆனால், இறைவர் கோயில் கோபுரம் அகற்சியுடையது. இத்தலத்தில் 1000 கால் மண் டப்ம் உண்டு, கோயிலுக்குள் பெரிய குளம் ஒன்று உண்டு. வசந்த மண்டபமும் இங்கு உளது. சுவாமி கோயிலில் உள்ள மண்டபத்தில் இரண்டு தூண்கள் உள்ளன. அவை 100 தூண்களாக வெட்டப்பட்டிருப்பதைக் கண்டு களிக்க வும. இங்கு சந்தன மரத்தாலாகிய நடராஜரைக் காண லாம். இவர்க்கு என்றும் சந்தனக் காப்பு உண்டு. இத்தலத் தின்மீது திருஞானசம்பந்தர் பாடிய பதிகம் ஒன்று உண்டு.