பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

9

ஆவார். எப்போதும் தொண்டுள்ளம் படைத்த தொண்டராகவே வாழ்ந்த சீலர்,

டாக்டர் இராஜேந்திர பிரசாத், மற்றபிற சுதந்திரப் போராட்டத் தலைவர்களை விட தனி இடத்தைப் பெற்றிருக்கிறார். இதற்குக் காரணம் பாபுஜியின் குறை காண முடியாத தேசத் தொண்டுதான் என்றால் மிகையன்று!

ஒரு நிலையில் நாட்டுப் பற்றுணர்வுகள் பொங்கப் பொங்க அவர் ஆற்றிய தேசத் தொண்டு, மறுநிலையில் உழவர் பெருமக்களுடைய துன்பங்களை, குறைகளைப் போக்குவதற்காக, அவர் பாடுபட்டு அரிய உழைப்பாளியாகவும் திகழ்ந்தார். அதனால்தான், ராஜன் பாபு இந்திய விடுதலை வீரர்களுக்குள் ஒரு தனி இடத்தைப் பெற்றுத் திகழ்ந்தார் எனலாம்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், கப்பலோட்டிய தமிழன் சிதம்பரம் பிள்ளை, மாவீரன் பகத்சிங், சுப்ரமணிய சிவா, திலகர், அரவிந்தர், வி.டி.சவர்க்கார் போன்ற மாவீரர்களது தேசாபிமானத் தொண்டுகளை மக்கள் படிக்கும் போதும், எண்ணும் போதும், அவர்களது உடல் புல்லரிக்கின்றது. இரத்தம் சூடேறுகிறது. ஏன்?

வெள்ளைக்காரன் ஆட்சியில் நாம் அடிமைகளாக இருந்தோம், சட்டத்தை எதிர்த்தோம். போலீஸ் கொடுமைகளோடு போரிட்டோம். நீதிமன்றப் படிக்கட்டுகளை வலம் வந்தோம். கடுங்காவல், சிறைத் தண்டனை, தூக்குமேடை, ஆயுள் தண்டனை இவற்றை அவர்கள் அனுபவித்துச் செத்தார்களே என்று எண்ணும் போதுதான். நமது தேசாபிமானமும், மனிதாபிமானமும் நமது ரத்தத்தைச் சூடேற்றுகின்றன.

இவ்வாறு பலவித கொடுமைகளையும் அனுபவித்த பிறகுதான் நமக்குரிய சுதந்திரத்தை வெள்ளையன் வழங்கினான். என்றாலும்,