10
பாபு இராஜேந்திர பிரசாத்
ஆங்கிலேயர்கள் கொடியவர்கள்; கொள்ளையர்கள் என்று எண்ணுகிற போது, எரிமலை போல நமது மனம் குமுறுகிறது அல்லவா?
ஆனால், ராஜன் பாபுவின் தேசீயப் போராட்ட வரலாறை, படிக்கும்போது, ரத்தம் சூடாகாது. நிலாவைப் போல சாந்தமே நமது நெஞ்சிலே பொழியும். நம்மை அறியாமல் நமது மனம் அருவியின் சலசலப்பை போல நயமான அமைதியை எழுப்பும் நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; நடப்பவை நல்லவையாக அமையட்டும் என்ற தத்துவத்தைப் போல, யாரையும் பகை கொள்ளப் பண்பையூட்டிக் கொண்டிருப்பதையும் பார்க்கின்றோம்.
எல்லோரும் நல்லவரே எம்கடன் பணி செய்து கிடப்பதே! நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே. நாட்டுக்கு நீ என்ன செய்தாய்? என்ற கேள்வியை எழுப்பி, அந்த உணர்விலே நமது தொண்டுகளைப் பதிவு செய்து கொள்வோம். நாம் வாழ்வது நமக்காக அன்று. நாட்டின் எதிர்கால வாரிசுகளுக்கே என்ற மனநிறைவையும் மகிழ்வையும் ராஜேந்திர பிரசாத் வரலாறு நமக்கு எடுத்துரைக்கிறது.