பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

19

செய்பவர்கள். அதனால், பீகாரிகள் என்றாலே வங்காளிகளுக்கு எப்போதும் கேலிப் பொருளாகவே தெரியும். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஏளனமாகவே வங்காளிகள் அவர்களைப் பேசுவர்! புத்தி மட்டு யாருக்கென்று ஒரு வங்காளியைக் கேட்டால், சற்றும் யோசிக்காமல், இது தெரியாதா? பீகாரிகள் தான் என்பார்கள்.

வங்காளிகளின் இந்த வக்ரப் புத்தியை வங்கக் கடலிலே தூக்கி எறிந்தார் இராஜேந்திரர்! அடுத்து வந்த ஒரு பரீட்சையில் இராஜேந்திரரிடம் புறுமுதுகு காட்டி ஓடினார்கள் வங்காள மாணவர்கள். பீகாரிகள் புத்தி நுட்பம் உடையவர்கள் என்பதை அவர் நிரூபித்துக் காட்டினார்.

பல்கலைக் கழகப் புதுமுகப் பரீட்சை அடுத்து வந்தது. அந்த தேர்விலே ராஜன் பாபு முதல் எண் பெற்றுத் தேறினார். இந்த செய்தியைக் கேட்ட பீகார் மக்களுக்கு ஒரே மகிழ்ச்சி. பீகார் மக்கள் அறிவாளிகளே என்பதை இராஜேந்திரர் மீண்டும் ஒருமுறை யெமப்பித்தார். இதனை ஒரு முறைக்கு இருமுறை நேரில் கண்ட வங்கப் பெருமக்கள் அவரை வியந்து பாராட்டினார்கள். என்றாலும், பீகாரிகளின் பெருமிதத்துக்கு இவை இணையாகுமா?

பீஹாரிலே இருந்து வெளிவந்த ‘இந்துஸ்தான் ரிவியூ’ என்ற திங்கள் இதழ், மாணவர் குல நாயகமான இராஜேந்திரரை வெகுவாகப் பாராட்டிப் புகழ்ந்து எழுதியது. வாலிபர் ராஜேந்திரர் எல்லா வகைகளிலும் சிறந்த மாணவராகத் திகழ்ந்தார். பல்கலைக் கழகத்திலும் அவர் இவ்வாறே சிறந்து விளங்குவார் என்று எதிர்பார்க்கிறோம். எதிர்காலத்தில் இராஜேந்திரருக்குப் பெரும் பதவிகள் கிட்டும் என்று நம்புகிறோம். நீண்ட ஆயுளோடு அவர் வாழ்ந்தால், எந்தப் பதவியும் அவருக்கு அரியதன்று. மாகாண உயர்நீதிமன்றத்தில் அவர் நீதிபதி பதவியை வகிக்க முடியும். இந்துஸ்தான் பத்திரிகை 1902 ஆம் ஆண்டில்