பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



4. பாபு இராஜேந்திரர் எழுதிய
கண்ணீர்க் கடிதங்கள்

என்று இராசேந்திரர் கல்வி பயிலத் துவங்கினாரோ அன்று முதல், அவர் தேர்வு எழுதிய எல்லாப் பரீட்சைகளிலும், அதாவது, பி.ஏ. படிப்பு வரையுள்ள தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவராகவே திகழ்ந்து வந்தார். அதனால், கல்லூரிகள் ராஜேந்திரரைப் பேராசிரியராகப் பணியாற்றிட அழைப்பு விடுத்தன.

முசபர்பூர் கல்லூரியில் சரியான பாடப் பயிற்சி இல்லை என்ற கருத்து அங்குள்ள பொது மக்களிடையே ஒரு குறையாகவே பல ஆண்டுகளாக இருந்தது. எனவே, கல்லூரி நிர்வாகம் இராஜேந்திரரின் தகுதி திறமைகளை அறிந்து அவரை ஆங்கிலப் பேராசிரியராகப் பதவி ஏற்குமாறு அழைத்தது.

அக்கல்லூரி நிர்வாகம் தன்னைத் தேர்வு செய்து விட்டதால், அதனைத் தவிர்க்காமல் பேராசிரியர் பொறுப்பை ஏற்றுப் பத்து மாதங்கள் மட்டுமே அங்கு பணிபுரிந்தார். அதன்பின் கல்கத்தா சட்டக் கல்லூரியில் சேர்ந்து, 1915 ஆம் ஆண்டின் போது, அவர் வழக்குரைஞரானார்.

பாட்னா என்ற பாடலி புத்திர நகரில் உயர்நீதிமன்றம் ஒன்று 1916 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. அதனால் பாபு வேறு