பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

பாபு இராஜேந்திர பிரசாத்

கொண்டு குடும்பத்தைக் காப்பாற்றுவீர்கள் அல்லவா? எனவே, ஞானம் என்பது எல்லாருக்கும் பொது, ஞான பூர்வமாகப் பார்த்தால், இருப்பதை வைத்துக் கொண்டு நாம் மன நிறைவு அடைய வேண்டியவர்கள் தாமே!

நான் இல்லாமல் தாங்கள் வாழ வேண்டும் என்பது கடவுள் சித்தமானால் அதை தாங்கள் ஏற்றுத்தான் ஆக வேண்டும். ஆகையால், பொது மக்களுக்கு முன்னால் கொஞ்சக் காலம் தரத்தில் தகுதியில் குறைந்தவர்களாகவே இருப்போம் என்று எண்ணி வறுமையை மேற்கொள்ளுங்கள்.

சுதந்திர சிந்தனையையும், பெருமிதமான புத்தியினையும் தங்கள் வாயிலாக உலகுக்கு உணர்த்துங்கள். உலகத்தில் பெரியோர்கள் இருக்கிறார்கள் என்பதை இந்தப் பூமி புரிந்து கொள்ளட்டும்.

பணம் அல்ல பொருள்! தொண்டே மெய்ப் பொருள் என்பதை உலகத்துக்கு அறிவுறுத்துங்கள் லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கைக்கு முன்னுதாரணமாக விளங்குங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, என் நன்றிக்கு ஓர் இலக்காக இருங்கள்!

எனது முடிவைப் பற்றி என் மனைவிக்கும் எழுதியிருக்கிறேன். அம்மாவுக்கு எழுதத் துணிவு உண்டாகவில்லை. அம்மாவுக்கு தள்ளாத வயது. திகைத்து விடுவார்.

தங்கள் அன்புள்ள
இராஜேந்திர பிரசாத்

இந்தக் கடிதத்தைப் படித்துப் பார்த்தார் மகேந்திர பிரசாத். மலைத்துப் போய்விட்டார். சிறிது காலத்துக்கு முன்புதானே தந்தையை இழந்தோம். அந்த மனத் துன்பம் மாறுவதற்குள் இப்போது உடன்பிறந்த ஒரே ஒரு தம்பியையும் கை நழுவ