பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6. வழக்குரைஞர்களின் ஒழுக்கங்கள்
ராஜன் பாபு ஓர் உதாரணம்!

வழக்குரைஞர் ராஜன் பாபுவுக்கு வழக்குகள் வந்து குவிந்த வண்ணமே இருந்தன. அவரது தோற்றம், அடக்க சுபாவம், இனிய பேசும் தன்மை, ஒழுக்கத்தோடு சட்டத்தை அணுகும் திறன், பொய் வழக்குகளைப் பணத்தாசையால் தொடுத்துக் கெட்ட பெயரைப் பெறாத உயர் நோக்கம், வழக்குகளின் நுட்பமறிந்து அதன் அடிப்படை யூகங்களை ஆய்ந்து வழக்குகளைத் தேர்வு செய்யும் வியூகம், இவ்வறால்ராஜன் பாபுவின் புகழும் வருமானமும் பெருகியது. பாபுவைப் போன்ற ஜூனியர் வக்கீல்கள் எவரும் அவரைப் போல அளவுகடந்த வருமானத்தைச் சம்பாதிக்கவில்லை என்றே கூறலாம்.

1915 ஆம் ஆண்டில் எம்.எல். பட்டத் தேர்வுக்குப் பரீட்சை எழுதினார். மாகாணத்திலேயே முதல் இடம்பெற்று வழக்கறிஞராக ஆனதால், ராஜன் பாபு கல்கத்தா வழக்கறிஞர் என்ற பெயரைப் பெற்றார். அதனால், கல்கத்தா வழக்கறிஞர்கள் சங்கத்தினர் பாபுவுக்கு விருது வழங்கி விருந்து வைத்தனர்.

பீகார் மாகாணத்தின் தலைநகரான பாட்னாவில் 1916 ஆம் ஆண்டில் உயர்நீதி மன்றம் உருவானது. கல்கத்தாவிலே பணியாற்றிய ராஜன்பாபு உடனே பாட்னா வந்து வக்கீல்