பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
8. பீகார் காந்தி ராஜன் பாபு

முதல் உலகப்போர் முடிந்தது! பிரிட்டிஷ் ஆட்சி பல தேசத் தலைவர்களைப் போர்க்காலத்தில் சிறையில் பூட்டியது. போர் முடிந்த பின்னர், இந்தியத் தேசத் தலைவர்களை சுதந்திர லட்சியத்திற்காக இயங்கவிடாமல் அவர்களை முடக்கி வைக்க வேண்டுமென்று எண்ணியதால் பிரிட்டிஷ் அரசு, ‘ரெளலட்’ என்ற சட்டத்தைக் கொண்டு வந்தது.

இந்தச் சட்டம் ஆட்சி முறைக்கு வந்தால், இந்திய நாடு சிறைக கூடு ஆகிவிடும் என்பதால், இமயம் முதல் குமரி வரையுள்ள மக்கள் அனைவரும் மூர்க்கத்தனமாக அதை எதிர்த்தார்கள்.

தில்லி சட்டமன்ற உறுப்பினர்கள், சட்ட மன்றத்தில் ரெளலட் சட்டத்தை எதிர்த்தவர்கள். தங்களது பதவிகளைத் துக்கி எறிந்தார்கள். நாடெங்கும் இக்கிளர்ச்சி நடந்து கொண்டே இருக்கும் போது வேறு சில உறுப்பினர்கள் எழுந்து சட்டத்தைக் காரசாரமாக எதிர்த்துக் கண்டனம் செய்தார்கள்.

இந்திய சட்ட சபைக் கூட்டம் டில்லியில் நடைபெற்றுக் கொண்டிருந்த விவரத்தைக் கண்டிட காந்தியடிகள் அந்த சட்ட சபைக் கூட்டத்திற்குச் சென்றிருந்தார். அதுதான் அவரது வாழ்நாளில் அவர் பார்த்த முதல் சட்டசபைக் கூட்டமும் - கடைசிக் கூட்டமும் ஆகும். ரெளலட் மசோதா எவ்வாறு சட்ட சபையில் மதிக்கப்படுகிறது. அதன் ஆதரவு - எதிர்ப்புகளது நிலையென்ன.