பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

63


பூகம்பம் அழிவுகளைப் பற்றிக் கலந்து பேசி என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று யோசிப்பதற்காக ஜவகர்லால் நேருவும் வேறு சிலரும் பாட்னா நகருக்கு வந்தார்கள். அப்போதுதான் ராஜன் பாபு சிறையிலே இருந்து விடுதலையாகி வந்திருந்தார். ‘நாங்கள் கொடுத்த தந்திகள், பிற விவரங்கள் எதுவும் ராஜன்பாபுவிடம் போய் சேரவில்லை. காரணம் பூகம்ப அழிவுச் சக்திகளால் ஏற்பட்ட சேத விளைவுகள் தான். எனவே ராஜன்பாபுவுடன் வெட்ட வெளியிலேயே தங்கினோம்’ என்கிறார்.நேரு தனது கயசரிதையில்.

பிரிட்டிஷ் ஆட்சி இடிந்து விழுந்த கல், மண்ணை நீக்கிட எந்த வேலையையும் செய்யவில்லை. சவங்கள் அப்படியப்படியே நாறிக் கிடந்தன. பிரிட்டிஷ் அரசு எந்த உதவிகளையும் பீகார் மக்களுக்கு மனிதாபிமானத்துடன் செய்ய முன் வரவில்லை.

வெள்ளைக்காரர்களின் இந்த அரக்க மனோபாவத்தை விளக்கி ராஜன்பாபு இந்திய மக்களுக்கு அறிக்கை மேல் அறிக்கை வெளியிட்டுக் கொண்டே இருந்ததின் பயனால், நாடெங்கும் இருந்து நன்கொடைகள் வந்து குவிந்தன. ஒவ்வொரு மாகாணத்திலே இருந்தும் தொண்டர் படையினர் வந்து குவிந்தார்கள். லட்சக் கணக்கில் பணம் நிதியாக வந்தபடியே இருந்தது. வந்து சேர்ந்த அனைத்தையும் ஒழுங்காகப் பிரித்துப் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குப் போய்ச் சேர ராஜன் பாபுவும் அவரது குழுவினரும் தளராமல் வேலை செய்தார்கள். இந்த மாதிரியான பூகம்ப நிவாரண வேலை இரவும் பகலுமாக ஓராண்டு காலம் வரை நடந்து வந்தது. மக்களும் வேண்டிய உதவிகளைப் பெற்று வந்தார்கள்.

இவ்வாறு, முப்பது லட்சம் ரூபாய், அவரது வேண்டுகோளை ஏற்று மனிதாபிமானிகள் உடனுக்குடன் அனுப்பி வைத்தார்கள். இந்த நிவாரண வேலைகளுக்காக ராஜன்பாபு மக்களைத் திரட்டும் முறைகளையும், தனது நோயையும் உடல் உருக்குலைப்பையும்