பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

பாபு இராஜேந்திர பிரசாத்

பம்பாயில் காங்கிரஸ் மகா சபை 1934 ஆம் ஆண்டு கூடுவதாக இருந்தது. ராஜன் பாபு தான் அந்த சபைக்குத் தலைமையேற்கத் தகுதியுள்ளவர் என்று காங்கிரசார் எல்லோருமே முடிவு செய்தார்கள். அந்தக் காலத்தில், தேச சேவைக்குக் கிடைத்த பெரிய பதவி எது தெரியுமா?

காங்கிரஸ் மகா சபைக்குத் தலைமை ஏற்பது ஒன்றே பெரிய கெளரவம் என்றும் மக்கள் நம்பினார்கள். ஆனால், இந்தப் பதவியை ஏற்பதால் வரும் நஷ்டங்களும் உண்டு. ஊர்ப் பெரியவர்கள், மூத்த கட்சியினரின் கோஷ்டிகள், எல்லாவற்றுக்கும் மேலாக அரசினரின் பகைகள். இந்த முப்பெரும் விரோதங்கள் அவ்வளவு சுலபமாகவோ, விரைவாகவோ முடிவனவும் அல்ல.

ஆனால், இந்திய மக்களுக்கு, பீகார் மக்களுக்கு ராஜன் பாபுவிடம் உள்ள மதிப்பையும், செல்வாக்கையும் உலகுக்கு உணர்த்திட அவருக்கு காங்கிரஸார், கட்சியின் தலைமைப் பொறுப்பை மனமார வழங்கினார்கள்.

தலைவர் பொறுப்பை ஏற்றிட்ட ராஜேந்திர பிரசாத்துக்கு பம்பாய் நகர மக்கள் மட்டுமன்று, குமரி முதல் இமயம் வரையுள்ள காங்கிரஸ்காரர்கள் அமோக வரவேற்பை அளித்தார்கள். ராஜன் பாபுவின் தலைமை உரை காங்கிரஸ் கட்சியின் குறிக்கோள்களை வரையறுத்துக் காட்டுவதாக அமைந்திருந்தது. தலைவரின் அந்த முழக்கத்தின் சில பகுதிகளைக் கவனிப்போம்;

பீகாரில் நிலநடுக்கம் விதியின் விளைவாகவே நடந்தது. அதைத் தொடர்ந்து பீகாரில் பெரும் வெள்ளம் வந்தது. இந்தப் பரந்த நாட்டிலுள்ள எல்லாரும் பொருளுதவி செய்ததோடு கண்ணீரும் வடித்தனர். உழைக்கவும் முன் வந்தனர். அந்த மாகாணத்தின் மீது