பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
11. சுதந்திர இந்தியாவின்
முதல் ஜனாதிபதி ராஜன்பாபுவே!

பீஹாரில் ஏற்பட்ட கொடுமையான பூகம்பத்தை விட மிகப் பெரியதாக, பயங்கரமாக, ஏறக்குறைய 25 ஆயிரம் மக்களுக்கு மேல் மாண்டதாகக் கணக்குக் கூறும் கோரமான பூகம்பம், பெலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகராக உள்ள குவெட்டாவில் ஏற்பட்டது.

குவெட்டா நிலப்பிளவால் துன்புற்ற மக்களுக்கு நேரிடையாகச் சென்று வேண்டிய நிவாரண உதவிகளை ராஜன் பாபு செய்யத் திட்டமிட்டிருந்தார். ஏனென்றால், பீகாரில் ஏற்பட்ட பூகம்ப அழிவுச் சக்திகளை நேரில் கண்டு நிவாரணத் தொண்டு புரிந்தவர் அல்லவா? எனவே, குவெட்டா மக்களின் துயரத்தை நீக்குவதற்கான திட்டங்களோடு புறப்படத் தயாரானார்.

ஆனால் பிரிட்டிஷ் அரசு, ராஜன் பாபுவையும், காந்தியடிகளாரையும் குவெட்டா பூகம்ப நிவாரண வேலைகளுக்குப் போகக் கூடாது என்று தடை செய்து விட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு எந்தெந்த வகையில் உதவி செய்தது என்பதையும் மக்களால் அறிய முடியவில்லை. காரணம், பூகம்பச் செய்திகளைப் பத்திரிக்கைகள் பிரசுரிக்கக் கூடாது என்று அரசு தடைவிதித்துவிட்டதேயாகும். அதனால், பூகம்ப