பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

பாபு இராஜேந்திர பிரசாத்

இனிமையாக வாழ்த்தி அனுப்புவதை அவரது வழக்கங்களில் ஒன்றாகக் கடைபிடித்தார்.

இத்தகைய பண்பாளர், நாட்டுக்குரிய விடுதலை கிடைத்த பிறகும் கூட, ஓய்வு ஒழிச்சலின்றி மக்களும் பாரத நாடும் வளமாக வாழ்வதற்குரிய திட்டங்களோடு, அதற்கான முன்னேற்ற வழிகளை உருவாக்குவதிலும் அயராது உழைத்திட ஆசை கொண்ட அவர் ‘சதாகத்’ என்ற ஆசிரமம் ஒன்றை அமைத்து தனது இறுதி நாட்களை அங்கேயே கழித்து வந்தார்.

வயோதிகம் தனது வாசலிலே நின்று அவரை வாழ்த்தி வரவேற்றுக் கொண்டிருந்தது. நோய்கள் அவரை நொடி நொடிப் பொழுதாக நொறுக்கிக் கொண்டிருந்தன. இந்த நெருக்கங்கள் இடையே சிக்கி நலிந்த அந்த நெடிய மேனி, 1963 ஆம் ஆண்டு, மார்ச்சு மாதம் முதல் நாளன்று பாரத மாதா தாளிலே துவண்டு விழுந்து மரணமடைந்தது! காலத்தோடு இரண்டறக் கலந்து காலமானார் ராஜன்பாபுவின் ஆவி அமைதியைத் தேடி அடைக்கலமானது.

வாழ்க அவரது அரசியல் ஒழுக்க சீலங்கள்!
★ ★ ★