பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

பாப்பா முதல் பாட்டி வரை

மிகச் சிறிய நீர்க்கட்டிகள், சிகிச்சையின்றி கரையக் கூடும். பெரிதாக உள்ள நீர்க்கட்டிகளை ஸ்கேன் உதவியுடன், பெண்ணுறுப்பு வழியே ஒரு ஊசியைச் செலுத்தி, நீரை எடுத்து விடுதவதன் மூலம் கரைக்கலாம். மிகப்பெரிய நீர்க் கட்டிகள், சாக்லேட் சிஸ்ட், டெர்மாய்ட் கட்டிகளை, லேப்ராஸ்கோப்பி வழியாக அகற்றலாம். 80 சதவீதக் கட்டிகளுக்கு அறுவை சிகிச்சை தேவையில்லை. இந்தக் கட்டிகளைப் பெரும்பாலும், லேப்ராஸ்கோப்பி மூலம் அகற்றுவதே சிறந்தது. தக்க சமயத்தில் அகற்றுவதன் மூலம் குழந்தைப் பேறின்மையை முற்றிலுமாக ஒழித்து விடலாம்.

பெண்களே... டென்ஷன் வேண்டாம்

எங்கும் வேகம், எதிலும் வேகம், இந்த கம்ப்யூட்டர் யுகத்தில், காலை முதல் மாலை வரை, ஒரே பரபரப்பு. பதற்றம், படபடப்பு. விஞ்ஞானம் வளர, வளர நமது வாழ்க்கை முறையும் (Life Style) அடியோடு மாறிவிட்டது.

வாழ்க்கை முறை மாறியதால், பல புதுப்புது நோய்கள் அழையா விருந்தாளியாக நம் உடம்பில் புகுந்து கொட்டமடிக்கிறன.

பெண்களுக்கு பாதிப்பு: இந்தப் பரபரப்பான வாழ்க்கைச் சூழல், ஆண்களை விடப் பெண்களையே அதிகமாகப் பாதிக்கிறது. குறிப்பாக, வேலைக்குச் செல்லும் பெண்கள், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும், பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

காலையில் பால்காரர் வராததால் ஏற்படும் டென்ஷன், திடீரென சமையல் காஸ் தீர்ந்துவிடுவது, பள்ளி