பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

109

செல்ல குழந்தை அடம் பிடிப்பது, சாப்பாடு சரியில்லை எனக் கணவர் கோபிப்பது, பஸ் ஸ்டாப்பில் பஸ் நிற்காமல் செல்வது, என்று தொடர்ந்து டென்ஷன், டென்ஷன், டென்ஷன். இதனால் மன உளைச்சல், அழுத்தம் ஏற்பட்டு, நாளாடைவில் அது உடலையும் பாதிக்கிறது.

இவ்வாறு வாழ்க்கை முறை மாறியதால் ஏற்படும் நோய்களில், ஒன்று குடல் உளைச்சல் நோய் (iritable bowel syndrome) 70 சதவீதப் பெண்கள் இந் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். Hurry (அவசரம்). Worry (கவலை) Curry (மசாலா) ஆகியவை, இந் நோய்க்கு முக்கியக் காரணம். இந் நோய் பாதித்தால், இரைப்பையில் புண் ஏற்படும்.

வேலைக்குச் செல்லும் பெண்கள் மட்டுமின்றி, வீட்டில் உள்ள பெண்களும் இந் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்களுக்கும் இந்நோய் ஏற்படலாம். ஆனால், பெண்களையே இது அதிகம் பாதிக்கிறது.

வயிறு கவ்விப்பிடிக்கும்: பதற்றம் ஏற்பட்டால் வயிறு தொடர்பான உறுப்புகள் பாதிக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. நேர்முகத் தேர்வு நடக்கிறது. அடுத்து நம்மை அழைக்கப் போகிறார்கள் என்ற நிலையில், அடிவயிறு கவ்விப் பிடிக்கும். தேர்வு முடிவுகளைப் பார்க்கும்போது, மாணவ, மாணவிகளுக்கும், இதே உணர்வு ஏற்படும். இது போன்று நமது அன்றாட வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் பதற்றம், படபடப்பு காரணமாக, வயிறு பாதிக்கப்படுகிறது.

பதற்றத்தால் இரைப்பை, குடல் ஆகியவற்றின் செயல் திறன் வேறுபடுகிறது. ரத்த ஒட்டம், சுரப்பிகள் சுரக்கும் நீரின் தன்மை, ஆகியவை மாறுபடுகின்றன. பதற்றம் காரணமாகக் குடலில் புண் ஏற்படுகிறது. இதுவே குடல் உளைச்சல் நோய்.