பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

பாப்பா முதல் பாட்டி வரை

நோய்க்குக் குழப்பத்தை ஏற்படுத்தும் : வயிறு, குடல் சம்பந்தமான நோய்களுக்கு உள்ள அறிகுறிகளே, இந்த நோய்க்கும் தெரியவரும். அடி வயிற்றில் வலி இருப்பதால், பலர் குடல் வால் (Apeendix) நோய் என்று நினைத்து அறுவை சிகிச்சை செய்து கொள்வார்கள்.ஆனால் அதன் பின்னரும் வலி இருக்கும். அமீபாக் கிருமி தாக்குதல் என்று நினைத்து, அதற்கு மருத்து சாப்பிடுவார்கள். ஆனாலும், வலி தீராது. பித்தப் பை வியாதி போலவும், அல்சர் வலி-போலவும் தோன்றும்.

அறிகுறிகள் : வயிற்றில் எரிச்சல், வலி, இரைச்சல், சாப்பிட்ட உடனே மலம் களிக்க வேண்டும் என்ற உணர்வு, ஒரு நாளைக்கு 4 அல்லது 5 முறை மலம் கழிப்பது, உணவுக் குழாய், நெஞ்சில் எரிச்சல், வயிறு உப்புசமாக இருப்பது இந் நோய்க்கான அறிகுறிகள்.

கண்டுபிடிப்பது எப்படி ? : இந்நோய் பாதித்துள்ளதை அறிய, சரியான சோதனை முறை தற்போது நடைமுறையில் இல்லை. பெருங்குடல் வியாதிகளுக்கும், இதே அறிகுறி இருக்கும்.

எனவே வயிறு தொடர்பான பிற நோய்கள், இல்லை என்ற உறுதி செய்த பின்னரும், இந்த அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால், அது குடல் உளைச்சல் நோய் (irrtable Bowel Syndrome) என்று மருத்துவர்கள் தீர்மானிக்கிறார்கள்.

எனவே, குடல் வால் அழற்சி நோய் (அப்பன்டி சைட்டிஸ்) , புற்றுக்கட்டி, அல்சர் போன்ற நோய்களுக்கு உரிய பரிசோதனைகளை முதலில் செய்ய வேண்டும். குடல் உள் நோக்கிக் கருவி மூலம், பெரும்பாலான குடல் நோய்களைக் கண்டுபிடித்து விடலாம். எல்லாம் சரியாக உள்ளது என்று இச் சோதனைகளில் நிரூபிக்கப்பட்டால்,