பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

117

பொருளை வாங்குதவற்குக் கூட அவர்களுக்குத் தயக்கம் ஏற்படும். எல்லாவற்றுக்கும் யாரையாவது சார்ந்திருக்கும் சூழ்நிலை ஏற்படும். அதேசமயம், சகஜமாகப் பழகவிட வேண்டுமென்றால், மரபுகள் - பண்புகளை மீறி எல்லை மீற வேண்டும் என்று அர்த்தம் அல்ல. நல்ல நண்பர்களைத் தேர்வு செய்துகொண்டு, நல்ல விஷயங்களை விவாதித்து மகிழ்வதும், சகஜமாகப் பழகுவது தான்.

விளைவு என்ன? : இது போன்று சகஜமாகப் பழகாமல், தனக்குள்ளேயே உணர்ச்சிகளை அடக்குவோருக்கு, மன அழுத்தம் (டிப்ரஷன்) தாழ்வு மனப்பான்மை ஆகியவை ஏற்பட அதிக வாய்ப்புண்டு.குறிப்பாக, நண்பர்களே இன்றி இருப்போருக்கு, மனச் சிதைவு நோய் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம். மேலும், பூப்பெய்திய முதலே, பெண்களின் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஆரம்பிக்கின்றன. மாதவிடாய் சுழற்சி, கர்ப்பம் தரிக்கும் நிலை, மாதவிடாய் நின்று விடுதல் ஆகிய நிகழ்வுகளின் போது, ஹார்மோன் சுரப்பில் மாற்றம் ஏற்படும். எதிர் பார்க்காமல் கர்ப்பம் தரித்துவிடும் நிலையில் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புண்டு. இதே போன்று, மாதவிலக்கு நின்று விடும்போது, (மெனோ பாஸ்) மன அழுத்தம் ஏறப்டலாம். மாதவிடாய் முற்றிலும் நின்ற பிறகு, பெண்ணின் உடல் ஹார்மோன்களைச் சீரமைத்து, உடல் நலனைப் பராமரிக்க, தற்போது ஹாா்மோன் மாற்று சிகிச்சை (Harmone Replacemnt Therapy) உள்ளது.

கணவன்மார்களே! : மனைவியின் மனநலம் பாதிக்கப்பட்டால், அது குறித்துக் கணவன் கவலைப்படுவதில்லை. மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற அக்கறையும் இருப்பதில்லை. நான் ஏன் மன நல மருத்துவரிடம் வர வேண்டும், உனக்குத்தான்