பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

பாப்பா முதல் பாட்டி வரை

நிலையை மாற்றி, காது கேளாதவர் எவரும் இல்லை எனக் கூறும் அளவுக்கு, நவீன விஞ்ஞானம் முன்னேறியுள்ளது. பிறவியில் இருந்தே காது கேளாமல் இருப்பது, பிறந்த பிறகு காது கேட்கும் திறனை இழப்பது, என காது கேளாமையை, இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

ஊமைக்கு முக்கிய காரணம் : காது கேளாமையால், தான் பேச்சு வருவதில்லை என்பதைப் பலரும் அறியாமல், உள்ளனர். ஊமை என்பது, காது கேளாமையால் ஏற்படுவதாகும். காது கேட்பதால் தான் குழந்தை பேசும் திறனைப் பெறுகிறது.

குழந்தைப் பருவத்தில் முதல் 6 ஆண்டுகள் பேச்சுக்கு மிகவும் முக்கியம். அக் காலத்தில மூளையின் பேச்சுக்குரிய பாகம் (Speech Area) காது கேட்டால் தான் வளரும். காது கேட்காமல் இருக்கும்போது, எந்த வித வளர்ச்சியும் இல்லாமல் போய்விடும். இதனால், தொடர்ந்து பேச்சு வராமலேயே போய்விடும்.

வாய் பேசாத, காது கேளாத குழந்தைகளக்குத் தக்க சமயத்தில், அதாவது 2 முதல் 3 வயதுக்குள் சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால், எக் காரணம் கொண்டும் அவர்களைப் பேச வைக்க முடியாது. அதனால், குழந்தைகளை அழைக்கும் போது, சப்தத்தைக் கேட்டு திரும்பா விட்டாலோ, ஒன்றரை வயதுக்குப் பிறகு பேச்சு வராமல் இருந்தாலோ, உடனடியாகக் காது மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.

3, 4 வயதுக்குப் பிறகு குழந்தை தானாகவே பேசிவிடும் என்ற தவறான நினைப்பில், பல மருத்துவர்களும், பெற்றோர்களும், பொன்னான காலத்தை வீணாக்கிக் குழந்தையின் எதிர்காலத்தைப் பாழடித்து விடுகின்றனர். பெற்றோர்களின் அறியாமையால், ஒரு இயல்பான குழந்தை, ஊனமுற்றதாக மாறி விடுகிறது.