பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

பாப்பா முதல் பாட்டி வரை

காதினுள் பொருத்தப்படும் மின் தகடுகளைத் தவிர, வெளிப்புறம் (Speech Processor) ஒலி இழுப்பு என்ற சாதனமும், மைக்ரோபோனும், பயன்படுத்தப்படுகின்றன. பிறர் பேசும் சப்தங்களை, அதன் அதிர் வெண்களுக்குத் தகுந்தவாறு, ஸ்பீச் பிராசஸர் டிஜிட்டல் சிக்னல்களாக மாற்றுகிறது. அதனுடன் இணைக்கப்பட்டு, காதின் பின்புறமாகத் தலை மீது, பொருத்தப்படும் டிரான்ஸ்மீட்டர் Transmitter இந்த டிஜிட்டல் சிக்னல்களை தோலுக்கு அடியில் பொருத்தப்படும் ரிசீவர் மூலமாக, அதனுடன் இணைக்கப்பட்டு, காக்ளியாவினுள் உள்ள மின் தகடுகளுக்கு அனுப்புகிறது. அங்கிருந்து செவி நரம்புகள், இந்த டிஜிட்டல் எலக்ட்ரிக்கல் சிக்னல்களால் தூண்டப்படுகின்றன. காக்ளியா பழுதடைந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள், வரை அனைவருக்கும் இந்தச்சாதனத்தை பொருத்த முடியும்.

கருவிலேயே தாய்க்கு ஏற்படும் பல நோய்கள், குழந்தையின் உள்காது வளர்ச்சியைப் பாதிக்கலாம். பிறந்தவுடனேயே பல குழந்தைகளுக்கு மூளைக் காய்ச்சலாலும், உள்காது பாதிக்கப்படுகிறது. இதுபோன்ற குழந்தைகளுக்கு, அறுவை சிகிச்சை மூலம் இந்த நவீன கருவியைப் பொருத்திக் கேட்கும் திறனைப் பெறச் செய்யலாம். சில குழந்தைகளுக்குப் பிறவியில் இருந்தே - காதில் உள்ள எலும்புகள், மற்றும் செவிப்பறை இல்லாத நிலையில், நவின அறுவை சிகிச்சை மூலம், செயற்கை எலும்புகளையும், செவிப்பறையையும் பொருத்தலாம்.

கேட்கும் திறனைப் பெற்ற பின் இழப்பது : சில குழந்தைகளுக்கு நடுக்காதில் சளி கோர்ப்பதால், ஏற்கெனவே பாதிக்கப்பட்ட காது கேட்கும் திறன், முழுமையாகப் பாதித்து விடுவதுண்டு. கே.டி.பி லேஸர் எனும் நவீனக் கருவியால், ஜவ்வின் வழியாக நடுக் காதில்