பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

123

உள்ள சளியை நீக்கிவிட்டு, சின்தடிக் டெப்லானால் செய்யப்பட்ட சிறிய டியூப்களை இட்டவுடன், குழந்தை உடனடியாகக் கேட்கும் திறனைப் பெற்று விடும்.

பெரும்பாலான பெற்றோர்களும், மருத்துவர்களும் Imedance மற்றும் மைக்ராஸ்கோப் பரிசோதனையை மேற்கொள்ளத் தவறிவிடுவதால், நடுக் காதில் சளி அடைத்திருப்பதை அறியாமலேயே விட்டு விடுகின்றனர்.

பேச்சுப் பயிற்சி அவசியம் : கேட்கும் திறன் பெற்ற, பிறகு பேச்சுப் பயிற்சி கொடுப்பது மிகவும் அவசியம். குழந்தையின் வயது, மூளை வளர்ச்சி, பேச்சுத் திறன், காது கேளாமை, ஆகியவற்றைப் பரிசீலித்து, அதற்கேற்ப, ஒவ்வொரு குழந்தைக்கும் தனித் தனியாக, தக்க பயிற்சி அளிக்க வேண்டும். இத்துடன் பெற்றோர்கள், குழந்தை உறங்கும் நேரத்தைத் தவிர, மற்ற நேரங்களில் பயிற்சி அளித்தால், ஊமை என்ற ஊனத்தை உலகில் இருந்தே நீக்கிவிட முடியும்.

காதில், வெளிக்காது, நடுக்காது, உள்காது என 3 பாகங்கள் உண்டு. அலை ஒசைகள் (சப்தம்) வெளிக்காது மூலமாக வந்து நடுக்காதில் உள்ள முதல் எலும்பைத் தள்ளி, 2-வது எலும்பு வழியாக, 3-வது எலும்பை, பிஸ்டன் போல அசைய வைக்கிறது. அப்போது, உள்காதில் உள்ள நீர், அசைந்த நரம்பு வழியாக மூளைக்குச் செல்கிறது. வெளிக்காதில் அழுக்கு அல்லது மெழுகு காதை அடைக்கும் போது, கேள்வி பாதிக்கும். இதைச் சுத்தம் செய்த உடனே சரியாகி விடும்.

காதில் சீழ் வடிதல், சளி கோர்த்தல் மற்றும் எலும்பு வளர்ச்சி, போன்றவற்றால், பாதியில் கேள்வித்திறன் பாதிக்கப்படும்.