பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

பாப்பா முதல் பாட்டி வரை

ஏற்படும் வேறு பிரச்சினைகள் காரணமாக, ஸ்கேன் செய்யும்போது, குழந்தைக்கு உள்ள ஊனம் தெரியவந்து, கருச்சிதைவு செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம். எனவே, திருமணத்தை முன்னிட்டு மாதவிடாயைத் தள்ளிப்போட, மாத்திரை சாப்பிடக்கூடாது.

தவறான முறையில் கருச்சிதைவு : அனுபவமற்ற மருத்துவர்கள் மூலம் கருச்சிதைவு செய்து கொள்வதும், ஆபத்தில் முடியும். அனுபவமற்ற மருத்துவர்கள் மூலம், முதல் குழந்தையைக் கருச்சிதைவு செய்யும் நிலையில், உதிரப்போக்கு அதிகமாகி, நோய்த் தொற்று ஏற்படும். கருக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு, தொடர்ந்து குழந்தைப் பேறே இல்லாத நிலை ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு.

திட்டமிடல் அவசியம் : திருமணமானவுடன், முதல் குழந்தையைப் பெற்றுக்கொள்வதை, அதிக காலம் தள்ளிப்போடுவது நல்ல தல்ல. ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள, நான்கைந்து மாதங்கள் தள்ளிப் போடுவது நல்லது. அதற்கு, நிரோத் போன்ற தற்காலிக கருத்தடைகளை ஆண்கள் பயன்படுத்தலாம்.

கருத்தடை மாத்திரைகள் வேண்டாம் : குழந்தைப் பிறப்பைத் தள்ளிபோட, பெண் தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டால், அதுவே மாதவிடாப் பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைந்து விடுவதும் உண்டு. தொடர்ந்து கருத்தடை மாத்திரைகளைச் சாப்பிட்டு, பின்னர் மாத்திரை சாப்பிடாமல் கருத்தரிக்கும் நிலையில், கர்ப்பப் பையில், கரு பதிவதற்குப் பதிலாகக் கருக்குழாயிலேயே பதிந்து வளர ஆரம்பித்துவிடும். இது ஆபத்தானது. இதற்கு Ectopic Gestation என்று பெயா்.

அறிகுறிகள்: இதுபோன்று, கருக்குழாயில் கரு வளரும் நிலையில், மாதவிடாய் தள்ளிப்போகும் நிலையிலேயே