பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

பாப்பா முதல் பாட்டி வரை

சாப்பிடக்கூடாது. மாத்திரைகளைச் சாப்பிடுவது, குழந்தையின் உடல் உறுப்புகளைப் பாதிக்கும். எக்ஸ்ரே எடுக்கவே கூடாது.

கர்ப்பம் தரித்த முதல் இரண்டு மாதங்களில், காலையில் எழுந்தவுடன், வாந்தி உணர்வும், சோர்வும் இருக்கும். வயிறு காலியாக இருப்பதால், அமிலங்கள் அதிக அளவில் சுரந்து, வாந்தி வரும். மாலையில் வாந்தி இருக்காது. எளிதாக ஜீரணிக்கக்கூடிய இட்லி, பருப்பு சாம்பார், மோர், இளநீர், சூப் ஆகியவற்றைச் சாப்பிட வேண்டும். தினமும், காலை இரு வேளையும், மாலையில் இரு வேளையும், மொத்தம் 4 பெரிய டம்ளர் பால் குடிப்பது, தாய்க்கும், குழந்தைக்கும், மிகவும் நல்லது. சாத்துக்குடிப் பழச்சாறில், குளுக்கோஸ் போட்டுச் சாப்பிடுவது, குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.

முதல் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, சோர்வு நீங்கி முகம் தெளிவாகி விடும். மிகவும் கடினமான வேலைகளைக் கர்ப்பிணிப் பெண்கள் செய்யக்கூடாது. மதியம் 2 மணி நேரம், கட்டாயம் தூங்கி, ஓய்வு எடுக்க வேண்டும். தூங்கும்போது, தாயின் உடல் உறுப்புகள் அனைத்தும், ஓய்வு எடுக்கும் நிலையில் குழந்தைக்கு அதிக ரத்தம் போகும். இது குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும்.

நேராக ஏன் படுத்து தூங்கக் கூடாது? : கர்ப்பிணிப் பெண்கள் நேராகப் படுத்துக் தூங்கக்கூடாது. நேராகப் படுத்துக் தூங்குவதால், தாயின் ரத்தக் குழாய்களைக் கர்ப்பப் பை அழுத்தவதால், இதயத்துக்குச் செல்லும் ரத்த அளவு குறையும். இதனால் கருவில் உள்ள குழந்தைக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறையும். எனவே, கர்ப்பிணிகள், இதயம் உள்ள இடப்புறமாக ஒருக்களித்துப் படுத்துத்தான் எப்போதும் தூங்க வேண்டும்.