பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

131

அயோடின் உப்பே நல்லது : கர்ப்பம் தரித்தவுடனாவது, கல், உப்பைச் சமையலில் சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள கர்ப்பிணிப் பெண்கள், இவ் விஷயத்தில் அதிக அக்கறை கொள்ள வேண்டும். ஏனெனில், அயோடின் சத்து இல்லாவிட்டால், குழந்தை பிறந்தவுடன், அதற்குக் கழலை நோய்கள் வர வாய்புக்கள் உண்டு. எனவே, அன்றாடம் சமையலுக்கு அயோடின் கலந்த பாக்கெட் உப்பையே பயன்படுத்த வேண்டும்.

கர்ப்பம் ஊர்ஜிதமான உடனேயே ரத்தப் பிரிவு, ரத்த அழுத்தம், எடை, உயரம், சிறுநீரில் சர்க்கரை அளவு, சிறுநீரில் உப்பு, ஆகிய பரிசோதனைகளைச் செய்ய வேண்டும். கர்ப்பம் ஊர்ஜிதமானவுடன், பெண்ணின் எடை 45 கிலோவும், உயரம் 150 செ.மீரும் இருத்தால் நல்லது. முதல் மூன்று மாதங்களில், அரை கிலோ கிராம் அளவுக்கே எடை அதிகரிக்கும். 4-வது மாதத்திலிருந்து, மாதம் ஒன்றுக்கு இரண்டு கிலோ வீதம் அதிகரிக்க வேண்டும். எடை அதிகரிக்காமல் போனாலோ, அல்லது எடை 3 கிலோ அளவுக்கு அதிகரித்தாலோ, பிரச்சினை வரும். அதிக ரத்த அழுத்தம். சிறுநீரில் உப்பு, அதிக எடை காரணமாக கர்ப்பிணிப் பெண்களுக்குக் கை, கால்களில் வீக்கம் ஏற்படுகிறது. இதனால், கருவில் உள்ள குழந்தைக்குப் போதிய ரத்தம் கிடைக்காமல், அதன் வளர்ச்சி பாதிக்கப்படும். கை, கால்களில் வீக்கம் தெரிந்த உடனேயே மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

ஏன் உணர்ச்சிவசப்படக் கூடாது : கர்ப்பிணிகள் உணர்ச்சிவசப்படுவதோ, கோபப்படுவதோ நல்லது அல்ல. ஏனெனில், கோபப்படும்போது, அட்ரீனலின், சுரப்பிகள் அதிகமாகச் சுரந்து, ரத்தக் குழாய்கள் சுருங்கி கருவில் உள்ள குழந்தைக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறையும். குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படும்.