பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

13

5-7 வயதுள்ள குழந்தைகள், படிக்கவும், எழுதவும் கூடிய கால அட்டவணை தயாரிக்கப்பட்டிருக்கிறது. இசை, நாட்டியம். கைவேலை, காகித வேலை, படம் வரைதல் இவைகள், காலையிலும், மாலையிலும், கடைசி நேரத்தில் நடத்தப்படுகின்றன. 7-12 வயதுள்ள குழந்தைகளுக்காக இடைநிலைப் பள்ளியில் பாடமும் நடத்தப்படுகிறது.

பிருந்தாவனப் பயிற்சிப் பகுதி என்ற போதனா முறைப்பள்ளி ஒன்று, கிண்டர் கார்ட்டன் ஆசிரியர்களைத் தயாரிக்க இதனுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. கிண்டர் கார்ட்டன் பிரிவு, இடைநிலைப் பள்ளிப் பிரிவு, பிருந்தாவனப் பயிற்சிப் பகுதி, ஆகிய மூன்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இவைகளே அல்லாமல் தாய்மார்களுக்குக் குழந்தைப் பராமரிப்பு வகுப்புக்களும் நடத்தப்படுகின்றன.

குழந்தை நோய்கள்

வயது வந்தவர்களுக்கு வரக்கூடிய பல நோய்கள், குழந்தைகளையும் பற்றுகின்றன. எனினும், குழந்தைகளுக்கென வரும் சில தனிப்பட்ட நோய்களும் இருக்கின்றன. ஏனெனில் உடல் வளர்ச்சி, உறுப்புக்களின் அமைப்பு, நோய் தடுக்கும் சக்திப் பொருள் உற்பத்தி ஆகியவற்றில் குழந்தையின் உடல், வயது வந்த மனிதருடைய உடலினின்றும் மிகவும் மாறுபாடுடையது.

முதிர்ந்தவர்களுக்கு வரும் பல நோய்கள் குழந்தைகளைப் பாதிக்கும் போது, வெளியே தோன்றும் குறிகள், சில மாறுபாடுகளுடன் காணப்படுகின்றன. உதாரணமாக, சாதாரண பேதி நோயினால் வயது வந்த மனிதனின் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டு விடுவதில்லை. ஆனால் அதே நோய், ஒரு சிறு குழந்தையை அரை வேகத்துடன்