பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

பாப்பா முதல் பாட்டி வரை

பீய்ச்சி எடுக்கும் பால், அறை வெப்ப நிலைக்கு, ஆறு மணி நேரத்துக்குக் கெட்டுப்போகாது.

ஆறு மாதம் ஆனவுடன், குழந்தைக்குத் தாய்ப் பாலுடன், இணை உணவு கொடுக்கத் தொடங்க வேண்டும். வீட்டு உணவை மட்டுமே கொடுக்க வேண்டும். மசித்த உணவுகள், காய்கறிகள், பழங்கள், சாதம், இட்லி ஆகியவை கொடுக்கலாம். கொஞ்சம் கொஞ்சமாக இவற்றைக் கொடுக்க வேண்டும்.

குழந்தையின் கழுத்து நிற்காவிட்டால் : குழந்தை பிறந்தது முதல், மூளை வளர்ச்சித் திறனைக் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். பிறந்தது முதல் ஓராண்டுக்கு தலையின் சுற்றளவு எடுக்க வேண்டும். அந்தந்த மாதங்களில், குழந்தை செய்ய வேண்டியதைச் செய்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். நான்கு மாதங்களுக்குள் கழுத்து நிற்க வேண்டும். குழந்தையைப் படுக்க வைத்து மேலே நேராகப் பொம்மையை அசைத்து, தாய் பயிற்சி அளித்தால், கழுத்து நிற்க ஆரம்பித்து விடும். பயிற்சி அளித்தும் கழுத்து நிற்காவிட்டால், மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.

குழந்தையின் கால்கள் பின்னிப் பிணைந்திருந்தால் : குழந்தையின் கால்கள் பின்னிப் பிணைந்திருந்தால், அடிக்கடி இடுப்பில் தூக்கி வைத்திருந்தால் சரியாகி விடும்.

அடுக்குமாடிக் குழந்தைகளுக்கு என்ன நோய் ? : அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்போர், தங்களது குழந்தைகளை வீட்டுக்கு உள்ளேயே வைத்திருந்தால், அவர்களது உடலில் சூரியஒளி படாத நிலை ஏற்படும். இதனால் எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின்