பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

147

2.குழந்தை பிறக்காமல் இருப்பதற்கு ஆண்களிடம்கோளாறு அதிகமா, பெண்களிடம் கோளாறு அதிகமா? பெண்கள் அளவுக்கு ஆண்கள் தங்களைச் சோதனை செய்துகொள்ள முன் வருகிறார்களா?

குழந்தை பிறக்காமல் இருப்பதற்கு ஆண், பெண் கோளாறு விகிதம் சமமாகவே உள்ளது. முன்னைப் போல் இல்லாமல், ஆண்கள் பெருமளவில், தாங்களாகவே, முன்வந்து சோதனை செய்துகொள்ளும் அளவுக்கு நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. வராவிட்டாலும், அவர்களைத் தற்போது மனைவிகள் விடுவதில்லை.

3.திருமணமாகி குழந்தை இல்லை என்ற நிலையில், எத்தனை ஆண்டுகளுக்குள் சோதனைக் குழாய்க் குழந்தை முறைக்கு முயற்சி எடுக்கலாம்?

திருமணமான இரண்டு ஆண்டுகள் வரை, இயற்கையான கருத்தரிப்புக்குக் காத்திருக்கலாம். இரண்டு ஆண்டுகளுக்குள் குழந்தை பிறக்காவிட்டால், மருத்துவரை அணுகுவது நல்லது.

4. சோதனைக் குழாய் முறையில் குழந்தை உருவாக்குவதில் அண்மையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் என்ன? மொத்தம் எத்தனை வகைகளில் சோதனைக்குழாய்க் குழந்தைகள் உருவாக்கப்படுகின்றன?

இதுவரை பெண்களுக்குக் குறைபாடு இருந்தால், சோதனைக் குழாயில் கருவை உருவாக்கி, அதைக் கர்ப்பப் பையில் செலுத்தி, குழந்தைகளை உருவாக்கி வந்தோம். ஆணின் உயிர் அணுவில் அசைவோ, சுறுசுறுப்போ இல்லாமல் இருந்தால், ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்து வந்தது. ஆனால் இண்ட்ரா சைட்டோபிளாஸ்மிக் ஸ்பொ்ம் இன்ஜெக்ஷன்’ (Intracytoplasmic Sperm Injection) (இக்சி) என்ற நவீன முறையின் மூலம், பெண்கரு முட்டையை, ஒரு நுண்ணிய ஊசியினால் பிடித்து, மற்றொரு மெல்லிய